தமிழ் சினிமாவில் அடுத்ததாக வெளியாகவிருக்கும் மிகப்பெரிய திரைப்படம் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் திரைப்படம் ‘சூர்யா 42’. ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படம் இந்தியாவின் 10 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது என்ற தகவலுடன் அட்டகாசமான மோஷன் போஸ்டர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியது. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்கின்றார். மேலும் படத்திற்கு ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிசாமி ஒளிப்பதிவு செய்ய நிஷாத் யூசுப் படத்தொகுப்பு செய்கிறார். மேலும் பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவிருக்கிறார்.

மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் பீரியட் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் மிகப்பெரிய அளவு எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. இந்நிலையில் படம் குறித்த அட்டகாசமான அப்டேட்டை பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் தெரிவித்திருந்தார்.

அதன்படி சூர்யா 42 படத்தின் முதல் பார்வை மற்றும் டைட்டிலுடனான சிறப்பு வீடியோ வரும் விரைவில் வரக்கூடும் என்று ரசிகர்கள் ஒருபுறம் இணையத்தில் கருத்துகளை பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் சூர்யா 42 பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்களிடம் சூர்யா 42 படம் குறித்த அப்டேட் கேட்கையில் அவர்,

“சூர்யா 42 டைட்டில் & ரிலிஸ் தேதி அப்டேட் இன்னும் இரண்டு வாரங்களில் அறிவிக்கப்படும். மே‌ மாதம் சூர்யா 42 படத்தின் டீசர் எல்லா மொழியிலும் வெளியாகும். அது படத்தோட கதை சாரத்தை மக்களுக்கு தெரியப்படுத்தும்." என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரசிகர்கள் இந்த அட்டகாசமான அப்டேட்டை அதிகளவு பகிர்ந்து வருகின்றனர்.

மேலும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அவர்கள் சூர்யா 42, பத்து தல, தங்கலான் ஆகிய படங்கள் பற்றி பேசிய சுவாரஸ்யமான வீடியோ இதோ..