தனுஷ் நடிப்பில் தமிழ் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்ட திரைப்படம் ‘வாத்தி’ தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் கல்வியை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இப்படம் கடந்த பிப்ரவரி மாதம் 17 ம் தேதி வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது. திரைப்படம் வசூல் அடிப்படையிலும் விமர்சன அடிப்படையிலும் நல்ல வரவேற்பு பெற்று பாராட்டுகளை பெற்றது. தனுஷ் நடிப்பில் முன்னதாக வெளியான நானே வருவேன் படத்தை தொடர்ந்து அடுத்த ஹிட்டாக இப்படம் அவருக்கு அமைந்தது.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சம்யுக்தா கதாநாயகியாக நடிக்க, சமுத்திரக்கனி, சாய்குமார், தனிக்கெல்லா பரணி, கென் கருணாஸ் ஆகியோர் வாத்தி படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். . சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் J.யுவராஜ் ஒளிப்பதிவு செய்ய நவீன் நூலி படத்தொகுப்பு செய்துள்ளார். மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்து அனைத்து பாடல்களும் பட்டி தொட்டியெங்கும் ஒலித்து வைரலானது.
ரசிகர்கள் கொண்டாடி தீர்த்த வாத்தி திரைப்படம் கடந்த மார்ச் 17ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான Netflix தளத்தில் வாத்தி திரைப்படம் ஒளிபரப்பாகும் என அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பினை ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் படக்குழு அட்டகாசமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. வாத்தி திரைப்படத்தில் இருந்து நீக்கப்பட்ட காட்சியை படக்குழு வெளியிட்டது படக்குழு. இந்தியாவின் முதல் மதிப்பெண் எடுத்த மாணவனாக தனுஷின் மாணவன் பேசும் வீடியோவும் இறுதியில் தனுஷ் கண்கள் புன்னகையுடன் பார்பதும் போன்ற வீடியோ வெளியானது. இதனையடுத்து அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.