ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய சமூக வலை தளங்களில் முக்கியமான நபர்கள் அதாவது அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூதாய ஆளுமைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பயனாளர்களுடன் பயனாளர்களாக இருப்பது வழக்கம். அவ்வபோது நடப்பு செய்திகள், கருத்துக்களை பதிவிடுவார்கள். அது அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் இருந்து தான் வந்தது என்று தெரிந்து கொள்ள ப்ளு டிக் (verified badge) என்று சொல்லப்படும் நீல நிற சின்னம் கொடுத்திருப்பார்கள். அதன்மூலம் போலி கணக்குகளை தவிர்த்து உண்மையான பக்கங்களில் வரும் கருத்துக்களை கண்டறிய முடியும்.

இதனை பெற சில விதிமுறைகளை சமூக வலைத்தளங்கள் விதிப்பதுண்டு. அதில் முக்கியமானவை சமூதாயத்தில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது. ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வாங்கிய பின் ட்விட்டரால் கொடுக்கப்படும் ப்ளு டிக் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் அதற்கு மாத சந்தா ரூ.900 செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே இருந்த விதிமுறைகளுடன் இதனையும் சேர்த்தது. இது பல முரண்களை இணையவாசிகளிடம் ஏற்படுத்தியது. தற்போது யார் வேண்டுமென்றாலும் ப்ளு டிக் மாத சந்தா செலுத்தி பெற்று கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. அதன்படி மாத சந்தா வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் கட்ட வேண்டும் இல்லையென்றால் ப்ளு டிக் நீக்கப்படும் என்று ட்விட்டர் சிஇஒ எலன் மஸ்க் முன்னதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாத சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் முக்கிய பிரமுகர்களின் ப்ளு டிக் அதிரடியாக நீக்கி உள்ளது ட்விட்டர் நிறுவனம். இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், கிரிகெட் வீரர்கள் எம் எஸ் தோனி, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பல திரை பிரபலங்கள் ட்விட்டர் கணக்கு ப்ளு டிக் பறிபோனது. அதில் ட்விட்டரில் ப்ளு டிக் பறிகொடுத்த கோலிவுட் பிரபலங்களின் பட்டியல் பின் வருமாறு...

ரஜினிகாந்த்

விஜய்

தனுஷ்

சிலம்பரசன்

விஜய் சேதுபதி

கார்த்தி

சியான் விக்ரம்

சிவகார்த்திகேயன்

சமந்தா

லோகேஷ் கனகராஜ்

கீர்த்தி சுரேஷ்

ஏ ஆர் ரகுமான்

அனிரூத்

மாதவன்

துல்கர் சல்மான்

ராஷ்மிகா மந்தனா

அட்லி

செல்வராகவன்

விக்னேஷ் சிவன்

விஷால்

ஜிவி பிரகாஷ் குமார்

ஷங்கர்