குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமாகி தற்போது இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஹன்சிகா மோட்வானி அடுத்ததாக வாலு, ஸ்கெட்ச் & சங்கத் தமிழன் ஆகிய படங்களின் இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திலும், இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் ரவுடி பேபி படத்திலும் நடித்து வருகிறார்.

முன்னதாக ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக மஹா திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், தெலுங்கில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி, ஹன்சிகா மற்றும் நடிகர் ஆதி இணைந்து நடித்திருக்கும் பார்ட்னர் ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்து சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைபடத்தில் ஹன்சிகா மோட்வானி நடிக்கிறார். தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் இப்புதிய திரைப்படத்திற்காக பிரம்மாண்டமான அறிவியல் ஆய்வுக்கூடம் ( Science Lab) செட் போடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் R.கண்ணனின் மசாலா பிக்ஸ் மற்றும் ஃபோக்கஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரிக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது பூஜையுடன் தொடங்கியது. நேத்ரா எனும் இளம் அறிவியல் விஞ்ஞானி கதாபாத்திரத்தில் ஹன்சிகா நடிக்கும் இந்தப் படத்தில் பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவாளராக பணியாற்ற, சித்தார்த் சுபா வெங்கட் வசனங்களை எழுத, கபிலன் வைரமுத்து பாடல்கள் எழுதுகிறார். மேலும் இத்திரைப்படம் குறித்த இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.@masalapix @Dir_kannanR in association with #FocusFilms directs a science fiction-Fantasy-Horror comedy film with @ihansika . #MasalapixNo7

Shooting started with Pooja today.

A massive science lab set has been erected at ECR.@KabilanVai @subsi991 @johnsoncinepro #Aug15 pic.twitter.com/fVawmJy0tl

— Johnson PRO (@johnsoncinepro) February 28, 2022