இந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக வலம் வரும் நடிகை ஹன்சிகா மோட்வானி அடுத்ததாக இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் சயின்ஸ் பிக்சன் ஃபேண்டசி ஹாரர் காமெடி திரைப்படமாக உருவாகும் புதிய திரைபடத்திலும், இயக்குனர் விஜய் சந்தர் தயாரிப்பில் உருவாகும் புதிய திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

இதனிடையே ஹன்சிகாவின் 50வது திரைப்படமாக தயாராகியுள்ள மஹா திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ள நிலையில், உலக சாதனை முயற்சியாக ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டிருக்கும் 105 மினிட்ஸ், தெலுங்கில் த்ரில்லர் படமாக தயாராகியுள்ள மை நேம் இஸ் ஸ்ருதி, ஹன்சிகா மற்றும் நடிகர் ஆதி இணைந்து நடித்திருக்கும் பார்ட்னர் ஆகிய படங்களும் அடுத்தடுத்து ரிலீஸாக தயாராகி வருகின்றன.

இந்த வரிசையில் அடுத்ததாக ஹன்சிகா நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ரவுடி பேபி. இயக்குனர் J.M.ராஜ சரவணன் இயக்கத்தில் தயாராகும் ரவுடி பேபி படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து சத்யராஜ், மீனா, ராம்கி, சோனியா அகர்வால், ராய் லட்சுமி மற்றும் ஜான் கொக்கன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

அபிஷேக் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள ரவுடி பேபி திரைப்படத்திற்கு P.செல்லதுரை ஒளிப்பதிவில், தீபக்.S.த்வாரக்நாத் படத்தொகுப்பு செய்ய, சாம்.C.S இசை அமைத்துள்ளார். கவிப்பேரரசு வைரமுத்து பாடல்களை எழுதியுள்ளார். இந்நிலையில் ரவுடி பேபி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. பலரது கவனத்தை ஈர்த்துள்ள அந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ…

Here its the First look poster of - #Rowdybaby - More Updates coming very soon.#RowdybabyTamilMovie@Abhishek_films @jmrajasaravana1 @ihansika #Sathyaraj #ActressMeena #Ramki @soniya_agg @iamlakshmirai @johnkokken1 @samcsmusic @Vairamuthu @chelladurai355 @DeepakDFT pic.twitter.com/AjQmfqvo76

— Nikil Murukan (@onlynikil) April 8, 2022