தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பாளரும் நடிகருமான DG.குணநிதிக்கு திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் திரை உலகின் முன்னணி இசையமைப்பாளரும் நடிகருமான G.V.பிரகாஷ் குமார் மற்றும் முன்னணி இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணைந்து நடித்துள்ள செல்ஃபி திரைப்படத்தை தயாரிப்பாளர் DG.குணநிதி தனது DG ஃபிலிம் கம்பெனி சார்பில் தயாரித்துள்ளார்.
இயக்குனர் வெற்றிமாறனின் உதவி இயக்குனரான இயக்குனர் மணிமாறன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் செல்ஃபி திரைப்படத்தில் வர்ஷா பொல்லம்மா கதாநாயகியாக நடிக்க, வாகை சந்திரசேகர், சங்கிலி முருகன், தங்கதுரை, சுப்பிரமணியம் சிவா, வித்யா பிரதீப் ஆகியோருடன் இணைந்து தயாரிப்பாளர் DG.குணநிதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ள செல்ஃபி திரைப்படத்துக்கு இசையமைப்பாளர் G.V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ள செல்ஃபி திரைப்படத்தை கலைப்புலி.S.தாணு அவர்கள் தனது V க்ரியேஷன்ஸ் சார்பில் வெளியிடுகிறார்.
இந்நிலையில் செல்ஃபி திரைப்படத்தின் தயாரிப்பாளரும் நடிகருமான குணநிதியின் திருமணம் சமீபத்தில் நடைபெற்றுள்ளது. தொடர்ந்து சென்னையில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். தயாரிப்பாளர்-நடிகர் D.G.குணநிதியின் திருமணத்திற்கு கலாட்டா குழுமம் தனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது.