தமிழ் திரையுலகின் சிறந்த இசையமைப்பாளராக திகழும் இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார் அடுத்ததாக இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் வாடிவாசல், இயக்குனர் பாலா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் மற்றும் தெலுங்கு & தமிழ் என இரு மொழிகளில் தனுஷ் நடிக்கும் வாத்தி உள்ளிட்ட படங்களுக்கு இசைமைத்து வருகிறார்.

தொடரந்து கார்த்தியின் சர்தார், அருண்விஜயின் யானை, விஷாலின் மார்க் அண்டனி மற்றும் லாரன்ஸின் ருத்ரன் ஆகிய திரைப்படங்களுக்கும் இசையமைக்கும் ஜீவி பிரகாஷ் குமார், நடிகராக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் நடித்த இடிமுழக்கம் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

முன்னதாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் உருவாகும் ரெபல் படத்தில் நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் நீண்ட காலமாக ரிலீசுக்கு காத்திருக்கும் திரைப்படம் ஐயங்கரன். ஜீவி பிரகாஷ் குமார் உடன் இணைந்து மஹிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்க, காளி வெங்கட், அருள்தாஸ், ஆடுகளம் நரேன், ஹரிஷ் பெறடி, அபிஷேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

காமன் மேன் நிறுவனம் சார்பில் B.கணேஷ் தயாரித்துள்ள ஐங்கரன் படத்திற்கு சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவில் ஜீவி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். முன்னதாக ஐங்கரன் திரைப்படம் கடந்த மே 5-ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் சில காரணங்களால் ரிலீஸ் தள்ளிப்போனது.

இந்நிலையில் தற்போது ஐங்கரன் படம் வருகிற மே 12-ம் தேதி ரிலீஸாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் தனுஷ் ஐங்கரன் படத்தின் புதிய ரிலீஸ் தேதியை ட்விட்டரில் அறிவித்தார். தனுஷின் அந்த ட்விட்டர் பதிவு இதோ…

#ayngaran releases in theatres on MAY 12th . Hearing a lot of positive reviews . Best of luck @gvprakash god bless. pic.twitter.com/1RTfmYp07e

— Dhanush (@dhanushkraja) May 7, 2022