தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ரசிகர்களுக்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்த இசை அமைப்பாளர் ஜீவி பிரகாஷ் குமார், நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். முன்னதாக இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் இடிமுழக்கம் & இயக்குனர் மதிமாறன் இயக்கத்தில் கௌதம் வாசுதேவ் மேனன் உடன் இணைந்து செல்ஃபி ஆகிய திரைப்படங்கள் ஜீவி நடிப்பில் நிறைவடைந்து விரைவில் ரிலீஸாக தயாராகி வருகின்றன.

அடுத்ததாக அறிமுக இயக்குனர் நிகேஷ் இயக்கத்தில் ரெபெல் படத்தில் தற்போது நடித்து நடித்து வரும் ஜீவி பிரகாஷ் குமார்., இசையமைப்பாளராக தனுஷின் மாறன் & வாத்தி, கார்த்தியின் சர்தார், ராகவா லாரன்ஸின் ருத்ரன், அருண் விஜய்யின் யானை உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்த வரிசையில் கடந்த ஆண்டு (2021) ஜீவி பிரகாஷ் குமார் நடிப்பில் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் பேச்சுலர்.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்ற பேச்சுலர் படத்தை Axess ஃபிலிம் ஃபேக்டரி, தயாரிப்பாளர் G.டில்லிபாபு தயாரிப்பில் இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கியுள்ளார். ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்துள்ள பேச்சுலர் படத்திற்கு சித்துகுமார் பின்னணி இசை சேர்க்க, திபு நினன் தாமஸ், சித்துகுமார், ஜீவி பிரகாஷ், காஸீஃப் ஆகியோர் இணைந்து பாடல்களுக்கு இசை அமைத்துள்ளனர்.

பேச்சுலர் படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டடித்த நிலையில் தற்போது இந்தப் பாடல்கள் பாலிவுட் வரை ஃபேமஸ் ஆகியுள்ளது. பேச்சுலர் படத்தில் இடம்பெற்றுள்ள அடியே எனும் பாடலை பாலிவுட்டின் முன்னணி கதாநாயகரான விக்கி கௌஷல் தனது ஃபேவரட் பாடல் என ரசித்து கேட்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அந்த வீடியோ இதோ…

This made our day 🤩
The charming @vickykaushal09 vibing to the chartbuster song #Adiye ❤️https://t.co/oLZYWdKmQh

A @dhibuofficial Musical #Bachelor @gvprakash @Dili_AFF @Axessfilm @Sathishdiroff @divyabarti2801 @SakthiFilmFctry @KapilKapilan_ @gkblyrics @thenieswar pic.twitter.com/OeEQN1ZOlo

— Think Music (@thinkmusicindia) February 9, 2022