சமூகவலைத்தளங்கள் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஒன்றாக மாறிவிட்டது.அதன் மூலம் பல தகவல்களை மக்கள் தெரிந்துகொண்டுள்ளனர்.முக்கிய தேடுதல் தளமாக மக்கள் மத்தியில் பிரபலமான ஒன்று கூகுள்.இதன் மூலம் மக்கள் எந்த செய்தியை வேண்டுமானாலும் தெரிந்துகொள்ளலாம்.

இந்த தேடுதல் செயலியின் மூலம் மற்ற செயலிகளுக்கும் செல்ல முடியும்.இதில் திரைப்படங்கள்,ஸ்போர்ட்ஸ் என பல வகையானவற்றை மக்கள் பார்த்து ரசித்து வருகின்றனர்.குறிப்பாக லாக்டவுன் நேரத்தில் பலரும் பல மொழி படங்களை பார்த்து ரசித்து வருகின்றனர்.

வருடா வருடம் அதிகம் தேடப்பட்ட லிஸ்ட்களை கிரிக்கெட்,சினிமா போன்ற பல துறைகளில் கூகுள் வெளியிடுவார்கள் அப்படி தற்போது ஒரு லிஸ்டை வெளியிட்டுள்ளனர்.2022 பாதிவரை அதிகம் கூகுள் தளத்தில் தேடப்பட்ட ஆசியா பிரபலங்களின் லிஸ்ட்டை கூகுள் தற்போது வெளியிட்டுள்ளனர்.இதில் இந்தியாவை சேர்ந்த பலரும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் நடிகர்களை பொறுத்தவரை தளபதி விஜய் 22ஆவது இடத்தில் உள்ளார்,அவரை அடுத்து தனுஷ் 61ஆவது இடத்திலும்,சூர்யா 63ஆவது இடத்திலும்,ரஜினிகாந்த் 77ஆவது இடத்திலும் உள்ளனர்.நடிகைகளில் காஜல் அகர்வால் 15,சமந்தா 18,ராஷ்மிகா 20,நயன்தாரா 33ஆவது இடத்திலும் உள்ளனர்.பல தென்னிந்திய பிரபலங்கள் இந்த லிஸ்டில் இருப்பது ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

Thalapathy @actorvijay at 22nd place 🔥#Varisu #Beast https://t.co/FEbq1AnlO5

— Vijay Fans Trends (@VijayFansTrends) June 27, 2022