எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை தழுவி இயக்குனர் வெற்றிமாறன் இரண்டு பாகங்களாக இயக்கிய திரைப்படம் விடுதலை. இப்படத்தின் முதல் பாகம் கடந்த மார்ச் மாதம் 31 ம் தேதி வெளியானது. ரசிகர்களின் மிகப்பெரிய கொண்டாட்டத்துடன் தமிழகமெங்கும் மக்களின் ஆதரவுடன் திரைப்படம் வெற்றிகரமாக ஓடியது, விமர்சனத்திலும் வசூலிலும் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது. அட்டகாசமான பீரியட் கிரைம் திரில்லர் திரைப்படமாக உருவான இப்படத்தில் நடிகர் சூரி முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தொற்றத்தில் நடித்திருப்பார். மேலும் இவர்களுடன் படத்தில் பவானி ஸ்ரீ, கௌதம் மேனன், ராஜீவ் மேனன், இளவரசு, சேத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையில் பாடல்கள் பட்டிதொட்டி எங்கும் ஒலிக்க திரைப்படம் அனைத்து ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டது இந்நிலையில் கடந்த ஏப்ரல் 28 ம் தேதி ஜீ 5 தளத்தில் திரையரங்குகளில் சேர்க்கப்படாத காட்சிகளுடன் சேர்ந்து director’s cut என்ற பெயரில் வெளியானது, இதையடுத்து ரசிகர்கள் விடுதலை திரைப்படத்தை பார்த்து கொண்டாடி பேசி வருகின்றனர்.

இந்நிலையில் ஜீ 5 ல் வெளியான விடுதலை director’s cut படம் குறித்து இயக்குனர்கள் வெற்றிமாறன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் ஆகியோர் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு பகிர்ந்த சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்து கொண்டனர் அதில் இயக்குனரும் இப்படத்தின் நடிகருமான கௌதம் மேனன் அவர்கள் விடுதலை திரைப்படத்தில் நடித்தது குறித்து பேசுகையில்,

“நான் என்னை நடிகனாக நினைத்து கொண்டதே இல்லை.. சில நேரங்களில் நான் நடிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகுகிறது. நான் ஏன் அதை செய்கிறேன்‌ என்றால் அது எனக்கு சவாலாக இருக்கின்றது. அது எனக்கு பிடிக்கவும் செய்கிறது. நான் அவரை என்னை சரிசெய்து கொள்ள அனுமதித்துள்ளேன்.. நான் உட்காரும் போது சண்டைய இழுத்து விடும் பழக்கம் உள்ளது. அதை பண்ணாதீங்க என்றார். சிகரெட் பிடிக்கும் போது இப்படி பண்ணலாமே என்றார்.‌ நான் வெற்றி எனக்கு இந்த பழக்கம் இல்லை என்றேன். அவர் எப்படி சிகரெட் கையில் பிடித்து கொள்ள வேண்டும் என்பதை சொல்லி கொடுத்தார். நான் அவரிடம் இதுதொடர்பாக முழுமையாக ஒப்படைத்து விட்டேன்.

விஜய் சேதுபதி நானும் ஒரே இடத்தில் இருந்து பேசக்கூடிய தருணம் படத்தில் இருக்கும்.மறுநாள் அவர் திரும்பவும் அந்த காட்சியை படமாக்க போறேன் என்றார். முன்பு பண்ணதே சவாலாக இருந்தது. காரணம் என் எதிரில் இருப்பவர் விஜய் சேதுபதி மற்றும் கேமிரா என்று நிறைய இருந்தது. அதை சமாளித்து நடிக்கவே எனக்கு சவாலாக இருந்தது. மீண்டும் மறுநாள் வந்து அந்த காட்சியை திரும்பவும் படம் எடுக்க போகிறேன் என்றார். எனக்கு அது பிடித்தது. மலையாளத்தில் நான் டிரான்ஸ் என்ற படத்தில் நடித்தேன். இதே உணர்வை நான் அங்கு உணர்ந்தேன் நான் அந்த நேரம் எப்படி இதை செய்வோம் என்று நினைத்தேன்‌.‌அதைதான் இங்கு உணர்ந்தேன். டப்பிங்கில் கூட வெற்றிமாறன் நுணுக்கமான சில விஷயங்களை செய்வார். சில விமர்சனங்கள் நான் படத்தில் பேசுவது ஸ்கூல் பசங்க பேசுறா மாதிரி இருந்தது என்று அது வெற்றி மாறன்..‌ நான் இல்லை.. அவர் அதை தான் விரும்பினார். அவர் நிறைய மாற்றங்களை டப்பிங்கில் செய்தார். நான் அந்த செயல்பாடுகளை சந்தோஷமாக செய்தேன். அவர் என்னை 3 நாட்களுக்கு மட்டும் நடிக்க கேட்டார். ஆனால் 18 நாள் ஆனது. அதை நான் விரும்பி தான் செய்தேன்" என்றார்.

மேலும் தொடர்ந்து இதே கேள்வி விடுதலை திரைப்படத்தின் நடிகரான இயக்குனர் கௌதம் மேனன் அவர்கள் இதுகுறித்து,