இந்திய திரையுலகின் கலை துறையில் பல தசபாதங்களாக பணியாற்றி அதி சிறந்த கலைஞர்களில் ஒருவராக இருந்து வருபவர் உலகநாயகன் கமல் ஹாசன். காலம் கடந்தும் இன்று வரை இவருக்கென்ற தனி ரசிகர் கூட்டம் உலகளவில் தக்க வைத்து கொண்டு தொடர்ந்து முன்னணி நட்ச்த்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். அதன்படி இவரது நடிப்பில் வெளியான விக்ரம் திரைப்படம் உலகளவில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதை தொடர்ந்து தற்போது உலகநாயகன் கமல் ஹாசன் பிரபாஸ் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக பிரமாண்ட பொருட்செலவில் உருவாகும் ‘புரோஜக்ட் கே’ என்ற படத்தில் நடித்து வருகிறார். பின்னர் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் இறுதிகட்ட படப்பிடிப்பில் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து துணிவு பட இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் ‘KH233’ என்ற படத்திலும் இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் ‘KH234’ படத்திலும் உலகநாயகன் கமல் ஹாசன் நடித்து வருகிறார்.

அடுத்தடுத்து முக்கிய திரைப்படங்களில் நடித்து வரும் உலகநாயகன் கமல் ஹாசன் ரசிகர்களுக்கு கூடுதல் சிறப்பாக வெளியான திரைப்படம் ‘வேட்டையாடு விளையாடு’ கடந்த 2006 ம் ஆண்டில் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படம் சமீபத்தில் ரி ரிலி செய்யப்பட்டது. ரி ரிலீஸ் திரைப்படம் என்றாலும் ரசிகர்கள் பெருவாரியான ஆதரவினை இப்படத்திற்கு அளித்து வெற்றி பெற வைத்துள்ளனர். கிட்டத்தட்ட பெரும்பாலான திரையரங்குகளின் காட்சிகள் ஹவுஸ் புல் என்று தகவலும் வெளியானது. கடந்த ஜூன் 23 ம் தேதி வெளியான வேட்டையாடு விளையாடு திரைப்படம் மூன்று வாரங்களை தொடர்ந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த மாபெரும் ரி ரிலீசை வெற்றியை தற்போது படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

இந்த வெற்றி விழாவில் வேட்டையாடு விளையாடு பட தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் மற்றும் இயக்குனர் கௌதம் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இது தொடர்பாக வெளியான புகைப்படங்கள் தற்போது ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டும் இந்த வெற்றியை ரசிகர்கள் இணையத்தில் கொண்டாடியும் வருகின்றனர்.

சைகோ திரில்லர் கிரைம் பாணியில் உருவான இப்படத்தில் அதிரடி காவல் துறை அதிகாரியாக உலகநாயகன் நடிக்க படத்தில் கதாநாயகிகளாக ஜோதிகா, கமாலினி முகர்ஜி நடிதுள்ளனர். மேலும் இவர்களுடன் பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி, சலீம் பைக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். செவன்த் சேனல் கம்யூனிகேஷன் தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்ய படத்திற்கு ஆந்தனி படத்தொகுப்புப் செய்திருப்பார். மேலும் ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்திருப்பார். இவரது இசையில் வெளியான பாடல்கள் இன்றும் ரசிகர்கள் ரசித்து கேட்டு மகிழ்ந்து வரும் பாடல்கள் என்பது குறிப்பிடதக்கது.

முழுக்க முழுக்க சீரியசான கிரைம் கதைகளாக உருவான வேட்டையாடு விளையாடு திரைப்படம் கமல் ஹாசன் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக கருத முடிகிறது. சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் இன்றைய தலைமுறையினருக்கு உலகநாயகன் பக்கா ஆக்ஷன் திரைப்படம் என்று கொண்டாடுவதை போல் வேட்டையாடு விளையாடு திரைப்படம் அன்றைய ரசிகர்களாலும் இன்றைய ரசிகர்களாலும் கொண்டாடப் படும் திரைப்படமாக அமைந்துள்ளது. வேட்டையாடு விளையாடு திரைப்படத்தை தொடர்ந்து உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த ஆளவந்தான் திரைப்படத்தையும் தொழில்நுட்ப தர வேலைகள் உயர்த்தி வெளியிடுவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ் தாணு முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடதக்கது.