தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழும் நடிகர் கௌதம் கார்த்திக் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர். தொடர்ந்து வரிசையாக ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் திரைப்படங்களில் நடித்த கௌதம் கார்த்திக் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். தனக்கே உரித்தான பாணியில் தொடர்ந்து பக்கா என்டர்டெய்னிங் திரைப்படங்களை கொடுத்து வரும் இயக்குனர் எழில் அவர்கள் தனது வழக்கமான படங்களிலிருந்து மாறுபட்டு முற்றிலும் ஆக்ஷன் திரில்லர் திரைப்படமாக உருவாக்கிய யுத்த சத்தம் திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பார்த்திபன் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கடந்த 2022 ஆம் ஆண்டு வெளிவந்த யுத்த சத்தம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

முன்னதாக நடிகர் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை படங்களில் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகியுள்ள பத்து தல திரைப்படத்திற்கு இசை புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விரைவில் பத்து தல படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருக்கின்றனர். இதனிடையே இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில் உருவாகும் 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் நடித்துள்ளார். இயக்குனராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் எங்கேயும் எப்போதும், வத்திக்குச்சி, ராஜா ராணி, மான் கராத்தே, ரங்கூன் உள்ளிட்ட தரமான படைப்புகளை தொடர்ந்து தயாரித்து வரும் AR.முருகதாஸ் அவர்கள் ஏ.ஆர்.முருகதாஸ் ப்ரொடக்சன் சார்பில் தயாரித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தை பர்பிள் புள் என்டர்டைன்மென்ட் மற்றும் காட் பிளஸ் என்டர்டைன்மென்ட் ஆகிய நிறுவனங்கள் வழங்குகின்றன.

இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 படத்தில் குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா ரிச்சர்ட் அஸ்தன் ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வகுமார். SK ஒளிப்பதிவில், 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ள ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். வருகிற ஏப்ரல் 7-ம் தேதி 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளிவந்த 1947 ஆகஸ்ட் 16 திரைப்படத்தின் டீசர் மற்றும் முதல் பாடலான கோட்பிக்கார பயலே பாடலும் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் இரண்டாவது பாடலாக சீனிக்காரி பாடல் தற்போது வெளியாகியுள்ளது. ரொமான்டிக்கான அந்த பாடலின் லிரிக் வீடியோ இதோ…