தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் கௌதம் கார்த்திக், மணிரத்னம் அவர்களின் கடல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர். தொடர்ந்து அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நடிகர் கௌதம் கார்த்திக் நடிப்பில் கடந்த 2022ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் யுத்த சத்தம். தனது வழக்கமான என்டர்டெய்னிங் திரைப்படங்களில் இருந்து மாறுபட்டு இயக்குனர் எழில் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லர் படமாக வெளிவந்த யுத்த சத்தம் படத்தை தொடர்ந்து இந்த 2023 ஆம் ஆண்டிலும் அசத்தலான திரைப்படங்கள் கௌதம் கார்த்திக் நடிப்பில் வெளிவர தயாராகி வருகின்றன.

அந்த வகையில் முதலாவதாக கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான மஃப்டி படத்தின் தமிழ் ரீமேக்காக சில்லுனு ஒரு காதல் மற்றும் நெடுஞ்சாலை திரைப்படங்களின் இயக்குனர் ஒபெலி.N.கிருஷ்ணா இயக்கத்தில் சிலம்பரசன்.TR உடன் இணைந்து கௌதம் கார்த்திக் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30 ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி பெரும் வரவேற்ப்பு பெற்றது. அடுத்ததாக கௌதம் கார்த்திக் நடிப்பில் அடுத்த அதிரடி ஆக்ஷன் என்டர்டெய்னர் திரைப்படமாக தயாராகி வரும் திரைப்படம் கிரிமினல். மதுரையை கதைக்களமாக கொண்டு இயக்குனர் தக்ஷிணா மூர்த்தி ராமர் எழுதி இயக்க கடந்த ஜனவரி மாதம் தொடங்கிய கிரிமினல் திரைப்படத்தின் படப்பிடிப்பு 40 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுள்ளது. கௌதம் கார்த்திக் மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் இணைந்து கிரிமினல் திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இதனிடையே கௌதம் கார்த்திக் நடிப்பில் வித்தியாசமான பீரியட் திரைப்படமாக தயாரான திரைப்படம் 16 ஆகஸ்ட் 1947. இயக்குனர் NS.பொன் குமார் இயக்கத்தில் நடிகர்கள் கௌதம் கார்த்திக் கதாநாயகனாக நடித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 படத்தில் குக் வித் கோமாளி புகழ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ரேவதி ஷர்மா, ரிச்சர்ட் அஸ்டன், ஜேசன் ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். செல்வகுமார். SK ஒளிப்பதிவில், 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்திற்கு சுதர்சன்.R படத்தொகுப்பு செய்துள்ள ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படம் கடந்த ஏப்ரல் 7-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. வித்தியாசமான கதைக்களத்தில் கலக்கலான பீரியட் திரைப்படமாக வெளிவந்துள்ள 16 ஆகஸ்ட் 1947 திரைப்படத்தின் அடுத்த சர்ப்ரைஸாக கோட்டிக்கார பயலே வீடியோ பாடல் தற்போது வெளியாகி உள்ளது. அந்த வீடியோ பாடல் இதோ…