உள்ளங்கைகளில் இணையதளம் குடியேறுவதற்கு முன்பே சினிமாவை பல கோணங்களில் ஆராய்ந்து இணையத்தின் வழியாக உள்ளங்களில் சேர்த்த பெருமை கலாட்டாவையே சேரும். பத்தொன்பது ஆண்டு கலாட்டா வரலாற்றில் அயராது கலைத்துறையின் மகிமையை உலகிற்கு பறைசாற்றி மகிழ்ச்சி கண்டோம்

திரைத்துறையில் அயராமல் உழைத்து சாதனை நிகழ்த்தும் புரட்சிப் பெண்களை அங்கீகரித்து கலாட்டா ஒண்டர் வுமன் விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்தது.இந்த விருது விழாவில் பல நட்சத்திரங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

திரைத்துறையில் பல சாதனைகளை நிகழ்த்திய பெண்மணிகளை பாராட்டி அவர்களை கௌரவப்படுத்தும் விதமாக இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.80-துகளில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்தவர்களில் தொடங்கி தற்போது இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருக்கும் நடிகைகள் வரை பல நட்சத்திரங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

சௌகார் ஜானகி,கே.ஆர்.விஜயா,சச்சு,லதா உள்ளிட்ட பழம்பெரும் நடிகைகளும்,90-ஸ்களின் ஆஸ்தான ஹீரோயின்களான ஹீரோயின்களான நதியா,மீனா,சுகன்யா,அம்பிகா,சிம்ரன் உள்ளிட்டோருடன்.தற்போதைய இளைஞர்களின் இதயங்களில் இடம்பிடித்துள்ள கீர்த்தி சுரேஷ்,ப்ரியா பவானி ஷங்கர்,ராஷ்மிகா மந்தனா,ஸ்ருதி ஹாசன்,சாயிஷா,வரலக்ஷ்மி சரத்குமார் உள்ளிட்டோரும் கலந்துகொண்டது விழாவை சிறப்பித்தனர்.

சிறப்பு விருந்தினராக தளபதி விஜயின் மனைவி சங்கீதா விஜய் கலந்துகொண்டு முடிசூடா தளபதி என்னும் விருதை பெற்றார்.இளைஞர்களின் கனவுக்கன்னி என்ற விருதை ப்ரியா பவானி ஷங்கர் வென்றார்.யூத் ஐகான் என்ற விருதினை ராஷ்மிகா வென்றார்.இயக்குனர் அட்லீ தனது மனைவி ப்ரியா அட்லீக்கு விருந்தளித்தார்.Priceless jewel of south cinema என்ற விருதினை கைப்பற்றினார்.ஆட்டம்,பாட்டம் கொண்டாட்டம் என்று கோலாகலமாக இந்த விருது விழா நடைபெற்று முடிந்தது.