மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான குரூப் திரைப்படம் பெரிய வரவேற்பை பெற்றிருந்தன.தென்னிந்திய மொழிகளை தாண்டி ஹிந்தியிலும் சில முன்னணி நட்சத்திரங்களோடு ஜோடி போட்டு நடித்து அசத்தியுள்ளார் துல்கர்.

அடுத்ததாக இவர் நடித்துள்ள ஹே சினாமிகா,சல்யூட் உள்ளிட்ட படங்கள் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளன.ஹே சினாமிகா படம் மார்ச் 4ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதற்கான பட ப்ரோமோஷன்களில் பிஸியாக பங்கேற்று வருகிறார் துல்கர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் 10 மில்லியன் ரசிகர்களை பெற்று மலையாளம் சினிமாவில் அதிகம் தொடரப்பட்ட நடிகர் என்ற பெருமையை பெற்றுள்ளார் துல்கர் சல்மான்.இதனை ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)