மலையாளம் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் துல்கர் சல்மான்.மலையாளம் சினிமா மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் ஜொலித்து தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகராக தொடர் வெற்றிகளால் அவதரித்தார் துல்கர் சல்மான்.

இவர் நடிப்பில் சமீபத்தில் சல்யூட் படம் நேரடியாக சோனி லைவ் தளத்தில் வெளியாகி ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து சில முக்கிய படங்களில் நடிக்கவுள்ளார் துல்கர் சல்மான்.

இவர் அடுத்ததாக Netflix தளத்தில் வெளியாகவுள்ள Guns and Gulaabs என்ற வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.பேமிலி மேன் வெப் சீரிஸை இயக்கி இந்தியா முழுவதும் பிரபலமானவர்களாக மாறிய இயக்குனர்கள் ராஜ் மற்றும் DK இந்த சீரிஸை இயக்குகின்றனர்.

துல்கருடன் இணைந்து ராஜ்குமார் ராவ் மற்றும் ஆதர்ஷ் கௌரவ் இந்த தொடரில் முன்னணி வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் இந்த வருட இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது OTT-யில் துல்கரின் முதல் ப்ராஜெக்ட் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த வெப் சீரிஸில் துல்கர் மற்றும் மற்ற முன்னணி நடிகர்களின் லுக்குகளை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by Dulquer Salmaan (@dqsalmaan)