தமிழ் சினிமா திரைபிரபலங்களும் ரசிகர்களும் மனமுடைந்த நாள் பிப்ரவரி 19. தீவிர சிவ பக்தரும் எம் ஜி ஆர் ரசிகருமான பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி சிவராத்திரி அன்று மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். ஒட்டுமொத்த ரசிகர்களும் தங்கள் துக்கங்களை வலைதளத்தில் பதிவிட்டும் பல முக்கிய திரைப்பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வந்தனர். தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களுக்கு பக்க பலமாகவும் மிகப்பெரிய தூணாகவும் இருந்த மயில் சாமியின் மறைவு திரைத்துறையை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.அவர் இறப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன் சிவன் கோவிலில் சிவராத்திரியை முன்னிட்டு பூஜையில் ஈடுபட்டார். இந்த பூஜையில் மயில்சாமி கேட்டு கொண்டதின் பேரில் பிரபல இசை கலைஞர் சிவமணியின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதுதொடர்பான வீடியோ அன்று இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான நடிப்பின் மூலம் திரைத்துறையில் ஜாம்பவனாக வலம் வந்த மயில்சாமியின் கடைசி நிமிடம் குறித்து பிரபல இசைக் கலைஞர் சிவமணி அவர்கள் நமது கலாட்டா தமிழ் மீடியாவில் பகிர்ந்து கொண்டு நெகிழ்ந்தார்.

அதில் அவர், "நிறைய இடத்தில் வாசித்து விட்டு அப்படியே அவர் சொன்ன இடத்திற்கு சென்றேன். பொதுவாகவே மயில்சாமி எதாவது கோயில் விசேஷத்திற்கு என்னை வாசிக்க அழைத்தால் நான் சென்று விடுவேன். அன்று இரவு எனக்காக அவர் காத்திருந்தார். அங்கு போனால் சின்ன கோயில் தான் அது ஆனால் நல்ல உணர்வு அங்கு இருந்தது. பாலபிஷேகம் ஆரம்பித்ததும் நான் துவங்குகிறேன் என்று சொல்லியருந்தேன். நான்காம் காலம் முடியும் நேரத்தில் என்னுடன் நாயணம் வாசித்தவர்களுக்கு காசு கொடுக்க என் மகனை அனுப்பினேன்.‌ கூட்ட நெரிசல் என்பதால் அவரால் போக முடியவில்லை. உடனே மயில்சாமி அவருடைய காசு என்னிடம் கொடுத்து, நீங்கள் கொடுங்கள் அவரிடம் என்றார். அதன்பிறகு அந்த நிகழ்வில் என்னுடன் சேர்ந்து ஓம் காரம் பாடினார். அது முடிந்த பின்பு என்னிடம் மயில் சாமி கூறினார். ‘எனக்கு ஒரு ஆசை இருக்கு, இந்த கோவிலில் நம்ம தலைவர் அண்ணன் ரஜினிகாந்தை அழைத்துவந்து பாலபிஷேகம் செய்யனும்’ என்றார். நான் உடனே அவரிடம் சொன்னேன். ‘உன் ஆசை நிறைவேறும் கவலைபடாதே’ என்றேன் பின் நான் அங்கிருந்து புறப்பட்டேன். காரில் ஏறியதும் நான் தொலைபேசியில் அழைத்து அவருக்கு நன்றி தெரிவித்தேன். அதன்பின் நான் அங்கிருந்து வேறு ஒரு கோவிலுக்கு சென்றேன். முடித்து கிளம்பும் போது மயில்சாமி மகன் அழைத்து அப்பா தவறிவிட்டார் என்றார்.” என்று குமுறினார்.

மேலும் அதனை தொடர்ந்து சிவமணி “அவருடைய கஷ்டங்களையும் அந்த நேரத்தில் என்னிடம் காட்டவில்லை எனக்கு என்ன பாக்கியம் என்றால் அவருடைய கடைசி நேரத்தில் நான் அவருடன் இருந்தேன் என்பதுதான். மயில்சாமி நான் முதல்முறை பார்த்த போது ஒரு நகைச்சுவை மனிதராக தான் தெரிந்தது. அதன்பின் தீபத்திற்கு அவருடன் வாசிக்க சென்ற போது தான் அவருடைய உண்மையான ஆன்மீகம் குணம் தெரிந்தது. அவரும் ஒரு சித்தர் தான். எல்லொரும் நல்லது நினைக்குறது. நல்லா இருக்கனும் னு நினைக்குறது எல்லாம். அதிலிருந்து அவர் மீது தனி மதிப்பு" என்றார். "அது எல்லோருக்கும் அமையாது. ஒருசில பேருக்குதான் கொடுக்குற மனப்பாங்கு வரும். அது உண்மையால் புரட்சி தலைவர் எம்.ஜி.ஆர் அவரை பார்தது பின்பற்றியது தான்.. நான் நேரில் நிறைய பார்த்திருக்கிறேன்." என்றார்.

மேலும் மயில்சாமியுடான பல தருணங்களை சிவமணி நமது கலாட்டா மீடியாவில் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..