தளபதி விஜய் அவர்களின் திரை பயணத்திலேயே இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத அளவிற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தயாராகி வரும் லியோ திரைப்படத்தில் நடிகர் மோகன்லாலின் த்ரிஷ்யம் திரைப்படத்தில் நடித்த முக்கிய நடிகை இணைந்துள்ளார். மாஸ்டர் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிக்கும் லியோ திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது. கடைசியாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன், ஃபகத் பாசில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த விக்ரம் திரைப்படம் கடந்த 2022 ஆம் ஆண்டு மிகப்பெரிய பிளாக் பஸ்டராக வெற்றி பெற்ற நிலையில் லியோ திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்புகள் கிளம்பியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி மாதத்தின் ஆரம்பத்தில் தொடங்கி மார்ச் இறுதி வரை தொடர்ச்சியாக 50 நாட்கள் காஷ்மீரில் நடைபெற்றது. தொடர்ந்து அடுத்த கட்ட படப்பிடிப்பாக தற்போது சென்னையில் லியோ பட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. தளபதி விஜய் உடன் நீண்ட இடைவெளிக்கு பிறகு திரிஷா லியோ படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். லியோ திரைப்படம் தளபதி விஜய் மற்றும் திரிஷா இருவருக்கும் அவர்களது திரைப் பயணத்தில் 67 வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்ஷன் கிங் அர்ஜுன், பிரியா ஆனந்த், இயக்குனர் மிஷ்கின், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், சாண்டி மாஸ்டர், மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், மனோபாலா மற்றும் ஜார்ஜ் மர்யன் ஆகியோர் லியோ படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

முன்னணி ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில், ஃபிலாமின் ராஜ் படத்தொகுப்பு செய்ய, N.சதீஷ்குமார் கலை இயக்குனராக பணியாற்ற பக்கா அதிரடி ஆக்சன் திரைப்படமாக தயாராகும் லியோ திரைப்படத்தில் ஸ்டண்ட் இயக்குனர்களாக அன்பறிவு மாஸ்டர்கள் பணியாற்ற, தினேஷ் மாஸ்டர் நடன இயக்குனராக பணியாற்றுகிறார். இந்த 2023ம் ஆண்டு வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ஆயுத பூஜை வெளியீடாக தளபதி விஜயின் லியோ திரைப்படம் ரிலீஸ் ஆகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். தற்சமயம் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் பிரபல மலையாள நடிகை சாந்தி மாயாதேவி லியோ படத்தில் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு லியோ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருப்பதாக சாந்தி மாயாதேவி பதிவிட்டுள்ளார். முன்னதாக மோகன்லால் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் வழக்குரைஞராக நடித்த சாந்தி மாயாதேவி நிஜத்திலும் வழக்குரைஞர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்குரைஞராக இருந்து நடிகையாக மாறிய நடிகை சாந்தி மாயாதேவி, லோகேஷ் கனகராஜ் உடன் லியோ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புது ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் தற்போது சோசியஸ் மீடியாவில் வைரலாகிறது. அந்த புகைப்படம் இதோ…