தமிழ் திரை உலகின் நட்சத்திர நாயகனாகவும் இந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் நடிகர் தனுஷ். முன்னதாக இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் நடித்துள்ள நானே வருவேன் திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இறுதிகட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக தமிழில் இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம் படத்தில் தற்போது நடித்து வரும் தனுஷ் தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

மொழிகளை கடந்து கோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல மொழி திரைப்படங்களிலும் கலக்கி வரும் தனுஷ் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் திரைப்படத்தின் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் இயக்கத்தில் நடித்துள்ள ஹாலிவுட் திரைப்படமான தி க்ரே மேன் வருகிற ஜூலை 15ஆம் தேதி திரையரங்கிலும் ஜூலை 22-ம் தேதி நேரடியாக நெட்ஃபிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகவுள்ளது.

முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்களான ரியான் கோஸ்லிங், கிரிஸ் எவன்ஸ், அனா டி அர்மாஸ் ஆகியோருடன் இணைந்து தி க்ரே மேன் திரைப்படத்தில் தனுஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஜேக்கப் தி ஹன்டர் எனும் கதாப்பாத்திரத்தில் தனுஷ் நடித்துள்ள தி க்ரே மேன் திரைப்படத்தின் ட்ரைலர் நேற்று மே 24ஆம் தேதி வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் இயக்குனர்கள் ரூசோ சகோதரர்கள் நடிகர் தனுஷின் கதாபாத்திரம் குறித்த முக்கிய தகவலை பகிர்ந்து கொண்டனர். இதுகுறித்து பேசிய அவர்கள், “தனுஷ் தி க்ரே மேன் திரைப்படத்தில் முக்கியமான கொலையாளி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார், அவருக்கு அசாத்தியமான அதிரடி ஆக்ஷன்கள் நிறைந்த 2 பகுதிகள் உள்ளன. நாங்கள் தனுஷின் ரசிகர்கள் எனவே அவருக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் எழுதியுள்ளோம். கேமராவின் முன்னிலையில் சிறப்பாக நடிக்கக் கூடியவர் அவர். மிகத் தரமான கெட்டவனாக அனைவரையும் கவரும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்” என தெரிவித்துள்ளனர்.

.@Russo_Brothers on @dhanushkraja - "Dhanush plays a top assassin in #TheGrayMan. He has 2 incredible action blocks. We are big fans of Dhanush & wrote the role specifically for him. He has a grt presence on camera. It's a classic badass character -fascinating, unique, fun"

WOW!

— Kaushik LM (@LMKMovieManiac) May 24, 2022