தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் சாம்ராட்டாக வலம் வரும் அஜித் குமார் அவர்களின் 52 வது பிறந்தநாள் தினத்தையொட்டி அவரது 62 வது திரைப்படத்தின் டைட்டிலை வெளியாகியுள்ளது. லைகா தயாரிப்பில் மகிழ் திருமேனி இயக்கவிருக்கும் படத்திற்கு ‘விடாமுயற்சி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தில் ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய இசையமைப்பாளர் அனிரூத் படத்திற்கு இசையமைக்கவுள்ளார். இதனை ரசிகர்கள் அஜித் குமாரின் பிறந்தநாளுடன் இரட்டிப்பு கொண்டாட்டமாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றது. வெகு விமர்சையாக கொண்டாடி வரும் இந்த அறிவிப்பையடுத்து ரசிகர்களுடன் பல திரைபிரபலங்களும் படக்குழுவினரை வாழ்த்தியும் அஜித் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்தும் வருகின்றனர்.

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் குமார் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் தெரிவித்து பின் விடாமுயற்சி படக்குழுவினரையும் வாழ்த்தி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், “பிறந்தநாள் வாழ்த்துகள் அஜித் சார்... உங்கள் மகிழ்ச்சிதான் எங்களுக்கு அனைத்துமானது.. உங்கள் மீது என்றும் நிரந்தரமாக எனது அளவுகடந்த அன்பு இருக்கும்.. AK62 மகிழ் திருமேனி சார் மற்றும் விடாமுயற்சி படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள்...” என்று குறிப்பிட்டுள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன். மேலும் இந்த பதிவுடன் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் உருவான என்னை அறிந்தால் படத்தில் இடம் பெற்ற ‘அதாரு அதாரு’ பாடல் படப்பிடிப்பின் போது அஜித் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து உள்ளனர். அந்த பாடலுக்கு பாடலாசிரியராக விக்னேஷ் சிவன் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அந்த பதிவு இணையத்தில் அதிகளவு பகிரப்பட்டு வருகிறது.

முன்னதாக லைகா தயாரிப்பில் அஜித் குமாரின் 62 வது திரைப்படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அறிவிப்பு வெளியாகி ஒரு வருடம் முடிந்த நிலையில் எந்தவொரு நடவடிக்கையும் வெளியாகாமல் இருந்த நிலையில் திடீரென அஜித் குமார் அவர்களின் 62 வது படம் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகாமல் இருந்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நமது கலாட்டா தமிழ் சிறப்பு பேட்டியில் இது குறித்து விளக்கமளித்தார். மேலும் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாக விடாமுயற்சி என்ற தலைப்புடன் படக்குழு அறிவித்துள்ளது. இதையடுத்து ரசிகர்கள் விக்னேஷ் சிவன் அவருக்கு தங்களது வருத்தம் தெரிவித்த நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் விடாமுயற்சி படக்குழுவினரை வாழ்த்தி உள்ளது. ரசிகர்களை நெகிழ செய்து அவரை வாழ்த்தி வருகின்றது.

பொதுவாகவே இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் அஜித் குமார் அவரின் தீவிர ரசிகர். அவரது என்னை அறிந்தால், வலிமை படங்களுக்கு சில பாடல்கள் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.