தமிழ் சினிமாவில் இளைஞர்களை கவரும் அளவு புத்துணர்வான கதைகளை கொண்டு குடும்பங்களும் ரசிக்கும்படியான படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். தமிழ் சினிமாவில் போடா போடி, நானும் ரௌடி தான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்களை கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த விக்னேஷ் சிவன் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான நயன்தாரா அவர்களை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தம்பதியினருக்கு சமீபத்தில் அழகான இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது. குழந்தைகளுக்கு உயிர் ருத்ரோனில் N சிவன், உலக் தெய்வீக் N சிவன் என்று பெயரிட்டனர். இது தொடர்பாக சமூக ஊடகங்களில் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர். அதே நேரத்தில் சிலர் எதிர்மறையான மீம்களையும் ட்ரோல்களையும் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் மீடியாவின் சிறப்பு நிகழ்ச்சியான கேம் சேஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற நிகழ்ச்சியில் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்கள் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் தன் மீது வரும் எதிர்மறையான மீம்கள் ட்ரோல்கள் குறித்து பேசினார்,

"சில நேரம் ரொம்ப மோசமா வரும்போது கொஞ்சம் கஷ்டமா இருக்கு.. முன்பை விட அவ்ளோ வன்மம் மீம் அளவு வந்து கொண்டிருக்கு.. சாதாரணமா போட்டாலே நம்ம அதிலிருந்து விலகி போவோம். இப்போ அதுக்கு மேல பேசுறாங்க.. குழந்தைங்களோட பேர் - அ போட்டா அதுக்கு கீழ வந்து தப்பு தப்பா கமெண்ட்ஸ் போடுறதெல்லாம் அவ்ளோ Sick mindset இருக்கு மக்களுக்கு.. அந்த தப்பு தப்பா கமெண்ட்ஸ் போடுறவனும் மனுஷன்தான். மனிதனா எந்த விஷயத்துக்கு எவ்வளோ பேசனும் னு தெரியனும். அது மூலமா ஒரு சந்தோஷம் கிடைக்குறது பற்றி புரிஞ்சிக்கவே முடியல.. நம்ம எவ்வளவு தான் அதிலிருந்து விலகி போனாலும் சில விஷயங்கள் அதை மீறி நம்ம கண்ணுக்கு முன்னாடி வரும்.. வரும்போது அது ரொம்ப கஷ்டமாதான் இருக்கும்.. ஆனா என்ன பன்றது பழகிக்கதான் ஆகனும். வாய் இருக்குனு என்ன வேணா பேசலாம் னு இருக்க கூடாது.. " என்றார் விக்னேஷ் சிவன்.

மேலும், "கொஞ்சம் நாள் முன்னாடி என் டிவிட்டர் கணக்கை ஒருத்தன் ஹேக் பண்ணிருந்தான். நான் அவனுக்கு நன்றி னு பதில் போட்டேன்.. முதல் இரண்டு நாள் அந்த கணக்கு திரும்ப பெற முயற்சி செய்தேன். மூன்றாவது நாள் நான் முயற்சி செய்யவே இல்லை. ஏன்னா நான் மூன்றாவது நாள் நிம்மதியா இருந்தேன். அதுக்கப்புறம் நான் அதை கண்டுக்கவே இல்லை.. பத்து நாள் கழிச்சு தான் ஒருத்தர் என்னமோ செய்து என் கணக்கு வந்தது. முதல்ல உள்ள வந்து "நன்றி" னு தான் போட்டேன்.. " என்றார்..

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் அவரது திரைப்பயணம் குறித்தும் நயன்தாரா மற்றும் அவரது மகன்கள் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..