தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத கலைஞராக இருப்பவர் நடிகர் தனுஷ். நடிகராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், இயக்குனராகவும், தயாரிப்பாளரகவும் தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவராய் வலம் வரும் தனுஷ் தமிழில் முன்னணி நடிகராவார். அதே நேரத்தில் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு. இந்தி, ஹாலிவுட் போன்ற மொழிகளிலும் நடித்து தன் நிலையை நாளுக்கு நாள் உயர்த்திக் கொண்டே சென்று வருகிறார். பன்முக திறன் கொண்டு பல பரிமாணங்கள் கவனம் பெற்று ரசிகர்களை கவர்ந்த தனுஷ் அவர்களிடம் இருந்து கவனிக்க வேண்டிய முக்கியமான பரிமாணம் தயாரிப்பாளர் என்பது தான்.

வொண்டர்பார் பிலிம்ஸ் என்ற பெயரில் தயாரிப்பாளராக களமிறங்கிய தனுஷ், தயாரிப்பில் முதல் படமான ‘3 படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்தது. அதை தொடர்ந்து எதிர்நீச்சல், வேலையில்லா பட்டதாரி, காக்கி சட்டை, மாரி, நானும் ரௌடி தான், ப பாண்டி, வேலையில்லா பட்டதாரி 2, காலா, வடசென்னை போன்ற பல பிளாக் பஸ்டர் திரைப்படங்களை கொடுத்தார். அதே நேரத்தில் உலக மேடைகளை அலங்கரிக்கும் நோக்கில் அம்மா கணக்கு, காக்கா முட்டை, விசாரணை போன்ற படங்களையும் தயாரித்து வந்தார். இடையில் முழுக்க முழுக்க பல மொழிகளில் பிஸியாக நடிக்க தொடங்கிய தனுஷ் தயாரிப்பில் சிறு காலம் இடைவெளி எடுத்துக் கொண்டார். தற்போது 5 ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கவிருக்கும் புதிய படம் ஒன்றில் நடித்து அப்படத்தை தயாரிக்கவுள்ளார் நடிகர் தனுஷ். இந்த கூட்டணியில் முன்னதாக கர்ணன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தனுஷ் தயாரிப்பின் மூலம் பிரபலமடைந்த கலைஞர்கள் ஏராளம் அதன்படி, சிவகார்த்திகேயன், அனிரூத், விக்னேஷ் சிவன் என்று பட்டியல் நீண்டு கொண்டே போகும். அதன்படி இயக்குனர் விக்னேஷ் சிவன் அவர்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான திருப்புமுனையாக இருந்த படம் நானும் ரௌடி தான் படத்தை தயாரித்தது தனுஷ் என்பது குறிப்பிடத்தக்கது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய ஹிட் அடித்த நானும் ரௌடி தான் திரைப்படம் தனுஷ் தயாரிப்பிலும் மிக முக்கியமான திரைப்படமாகும்

இந்நிலையில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்த ‘கேம் செஞ்சர்ஸ் வித் சுஹாசினி மணிரத்னம்’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பகிர்ந்து கொண்டார். அதில் விக்னேஷ் சிவன் நானும் ரௌடி தான் படம் குறித்தும் தனுஷ் உடன் ஏற்பட்ட நட்பு குறித்தும்பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில்,

"நான் நானும் ரௌடிதான் படத்திற்கு ஹீரோ தேடிட்ட இருந்த நேரம் படங்களுக்கு டிசைன் பண்ணிட்டு இருந்தேன். அங்கிருந்து வை ராஜா வை படமும் பண்ணோம். அப்பொல்லாருந்து ஐஸ்வர்யா மேடம் தனுஷிடம் சொல்லி அப்போதான் தனுஷ் அவர்களின் வேலையில்லா பட்டதாரி படத்திற்கு போஸ்டர் டிசைன் நானும் என் நண்பர் கமிலனும் பண்ணோம்.அப்போ தனுஷ் சார் அனிரூத் வெச்சு போட்டோ ஷூட் செஞ்சு அதிலிருந்துதான் படத்திற்கு டிசைன் பண்ணோம். அப்படியே தனுஷ் சார் ஃப்ரெண்ட்ஷிப் கிடைச்சுது. அப்படியே வேலையில்லா பட்டதாரி படத்தில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தது. அந்த படம் பயங்கர ஹிட் ஆயிடுச்சு. அதன் பின் தனுஷ் சார் என்னிடம் உனக்கு எதனா பண்ணனும் னு கேட்க நான் கதை இருக்கு தயாரிப்பாளராக இருங்கனு கேட்டேன். அப்போ அவர் ஓகே னு சொன்னார். இப்படிதான் தனுஷ் சார் நானும் ரௌடி தான் படத்திற்கு உள்ள வந்தார்.” என்றார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மேலும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தனது திரைப்பயணம் குறித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்தும் பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான தகவல் கொண்ட முழு வீடியோ இதோ..