தமிழ் திரையுலகின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் ரசிகர்களின் ஃபேவரட்டான இயக்குனராகவும் பல சூப்பர் ஹிட் என்டர்டெய்னிங் படங்களை கொடுத்து மகிழ்வது வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு. அந்த வகையில் டைம் லூப் கதைகளத்தில் அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசித்து கொண்டாடும் வகையிலான மாஸ் என்டர்டைனிங் திரைப்படமாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கிய மாநாடு திரைப்படம் சமீபத்தில் வெளிவந்து மெகா ஹிட்டானது.

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் சிலம்பரசனின் திரைப்பயணத்தில் மைல் கல்லாக அமைந்துள்ள மாநாடு திரைப்படத்தில் சிலம்பரசனுடன் இணைந்து கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்ஜி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் இணைந்து நடிக்க மிரட்டலான வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்திருந்தார்.

வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரித்த மாநாடு திரைப்படத்திற்கு ரிச்சர்ட் எம் நாதனின் ஒளிப்பதிவு செய்ய பிரவீன்.கே.எல் படத்தொகுப்பு செய்திருந்தார். மிக பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஏற்பட்ட பல தடைகளையும் தாண்டி வெளிவந்து பலரது கவனத்தையும் ஈர்த்துள்ள மாநாடு படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

மாநாடு படக்குழுவினருக்கு பல தரப்பிலும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் குவிந்து வரும் நிலையில் இந்திய திரை உலகின் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில்,

இயக்குனர் வெங்கட் பிரபு மாநாடு திரைப்படத்தை மிகவும் புத்திசாலித்தனமாக எழுதி இயக்கியுள்ளார்... சிலம்பரசன் அசத்தியுள்ளார்! S.J.சூர்யா அற்புதமாக நடத்துள்ளார்! யுவன் ஷங்கர் ராஜாவின் இசை மொத்த படத்தையும் வேறு தளத்திற்கு தூக்கி நிறுத்துகிறது. மேலும் படத்தில் பணிபுரிந்த அனைத்து நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்களது பணியை சிறப்பாக செய்துள்ளனர். தமிழ் திரை உலகிற்கு பொழுதுபோக்கான மற்றும் ஒரு புதிய அனுபவம்!

என இயக்குனர் ஷங்கர் தெரிவித்துள்ளார்.

#Maanaadu Brilliantly written & directed by @vp_offl . @SilambarasanTR_ Rocks! @iam_SJSuryah Marvelous!@thisisysr music was Elevating!All the actors and technicians at their best!The time l♾p drama worked out fantastically. An entertaining & new experience for Tamil Cinema👏👏👏

— Shankar Shanmugham (@shankarshanmugh) December 5, 2021