காலம் கடந்தும் ரசிகர்களிடையே இன்றும் அதிகம் பேசபட்டும் கொண்டாடப்பட்டும் வரும் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்று ‘சுப்ரமணியபுரம்’. 15 ஆண்டு கால நிறைவை படக்குழுவினர் ரசிகர்கள் என பலர் ஸ்லாகித்து கொண்டாடி வரும் சுப்ரமணியபுரம் திரைப்படம் திரைத்துறையில் புது பாதையை உருவாக்கி ரசிகர் மனதில் நீங்கா இடத்தை பிடித்த படமாக இருந்து வருகிறது. கடந்த 2008 ல் சசிக்குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் ஜெய் கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக சுவாதி நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குனர் சசிகுமார், சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்துள்ளனர். இயக்குனர் சசிகுமாரின் சொந்த தயாரிப்பில் உருவான இப்படத்திற்கு இசையமைத்திருப்பார் ஜேம்ஸ் வசந்தன். மதுரை நிலப்பரப்பில் ரவுடிசத்தையும் அதன் அரசியல் பின்னணியையும் பேசி வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் வசூல் ரீதியாவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று தமிழ் திரையுலகின் மிக முக்கியமான திரைப்படங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இப்படத்தினை ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினர் பலரும் கொண்டாடும் படமாக இருந்து வருகிறது.

இந்நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சிறப்பு பேட்டியில் சுப்ரமணியபுரம் படம் குறித்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அவர்கள் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சுப்ரமணியபுரம் படத்தின் இரண்டாம் பாகம் குறித்து இயக்குனர் சசிகுமார் பேசுகையில்,

இதில், "சுப்ரமணியபுரம் படத்தோட இரண்டாம் பாதி பண்ணனும்னு யோசிச்சோம். படம் பண்ணும் போதே ஜெய் நகைச்சுவையாக கேட்டார் 'இரண்டாம் பாகம் எடுப்போமா?' என்று நீ செத்துட்ட வர முடியாது என்றேன். அப்போ படத்துல நான் வருவேன். சுவாதி அப்பா இருப்பார். சமுத்ரகனி இறந்துட்டார். உடனே ஜெய் கேட்டார் நீங்க எப்படி வருவீங்க னு கேட்டார். நான் செத்ததை படத்துல காட்டவே இல்லையே. நகைச்சுவையுடன் என்றேன். கதையில கொஞ்சம் நாள் கழிச்சு பரமன் அடிபட்டு தாங்கி நடந்துட்டு வருவான். இப்போ துளசிக்கு கல்யாணம் ஆகி சாமி கும்பிட்டு இருக்கா.‌ அது ஒரு திருவிழா நேரம், அவளுக்குனு ஒரு குடும்பமே இருக்கு.. அந்த நேரத்துல டும்கானும் நானும் பழி வாங்க வரோம். இங்கருந்து ஆரம்பிப்போம் னு யோசிச்சோம். அப்பறம் இல்ல .. முதல் பாகம் இவ்ளோ ரீச் இருக்கு.. 15 வருஷம் அப்பறமும் இவ்ளோ தூரம் ரசிகர்கள் கொண்டாடுறாங்கனா அது சுப்ரமணியபுரமாகவே இருக்கட்டும். னு விட்டேன்.." என்றார்.

மேலும் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படம் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..