தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர் இயக்குனர் சசிகுமார். கடந்த 2008 ல் வெளியான சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் களமிறங்கிய சசிகுமார் முதல் படத்திலே ஒட்டு மொத்த திரையுலகினரை வியப்பில் ஆழ்த்தினார். முதல் படத்தின் மிகப்பெரிய வரவேற்பையடுத்து அவரது இயக்கத்தில் கடந்த 2010 ல் வெளியான திரைப்படம் ‘ஈசன்’. சமுத்ரகனி, வைபவ், அபிநயா, துஷ்யந்த் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் ரசிகர்களிடையே வசூல் ரீதியாக தோல்வியடைந்தாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப் பட்டது. இருந்தும் சுப்ரமணியபுரம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்று ரசிகர்கள் இன்றும் ஈசன் படத்தை விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் நமது கலாட்டா ப்ளஸ் சிறப்பு பேட்டியில் சுப்ரமணியபுரம் படம் குறித்து இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அவர்கள் சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில் சுப்ரமணியபுரம் படம் போல் இயக்குனர் சசிகுமார் இயக்கத்தில் வெளியான ஈசன் திரைப்படம் ரசிகர்களிடம் போகாதது குறித்து பேசுகையில்,

"சுப்ரமணியபுரம் படம் பண்ணதுக்கு அப்பறம் மதுரை கேங்ஸ்டர் கதைகளத்தில் ஒரு படம் வெச்சிருந்தேன். ஆனா அந்த டைம்ல சுப்ரமணியபுரம் படம் போல் நிறைய படம் வர ஆரம்பித்தது. அப்போ அதை பண்ணா ஒரே மாதிரி இருக்கும் னு அதை பண்ணல.. அதனால் தான் ஈசன் பண்ணேன். ஈசன் படத்துல 10 வருஷம் கழிச்சு பேச வேண்டியதை முன்னாடியே சொல்லிட்டேன். பப், பார்டி, ரேவ் ன்றது அதெல்லாம் சென்னையில வரல..

ரேவ் பார்ட்டி, மாத்திரை ன்றது இப்போதான் வளருது. தெரிஞ்சதை மக்களுக்கு சொல்லனும்னு இந்த பார்டி கலாச்சாரம் பற்றி தெரிந்து கொள்ள பாம்பே, பெங்களூர் போன்ற இடங்களுக்கு சென்றேன். அப்போ சென்னையில இல்ல.

இதையெல்லாம் முன்னாடியே சொன்னதாலே மக்களால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை.. சுப்ரமணியபுரம், நாடோடிகளோட எதிர்பார்ப்பு ஒருபுறம் படத்தின் மீது இருந்தது. அதுமட்டுமல்லாமல் படத்தை நீளமா எடுத்துட்டேன். அதன்பின் படத்தோட ரிலீஸ் தேதி அறிவிச்ச பின் அதனால் எதுவும் பண்ண முடியல.. படத்தை சுருக்க தேவையான நேரம் கிடைக்கல.. படத்தை முடிச்சிட்டு ரிலீஸ் தேதி சொல்லிருக்கலாம். ஆனா அப்படி பண்ணல அதுதான் தப்பாயிடுச்சு.. கடைசி நேரத்துல வேலை செஞ்சதால இப்படி ஆகிடுச்சு.." என்றார் சசிக்குமார்

மேலும் இயக்குனரும் நடிகருமான சசிகுமார் அவர்கள் சுப்ரமணியபுரம் திரைப்படம் உருவான விதம் குறித்து பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..