தமிழ் சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவரானவர் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். 1981 ல் வெளிவந்த 'சட்டம் ஒரு இருட்டறை' என்ற படத்தின் மூலம் பிரபலமடைந்த இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர். பின் சமூக பிண்ணனியுள்ள படங்களை இயக்க ஆரம்பிக்க தொடங்கினார் தொடர்ந்து தமிழ்,தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 70க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். மேலும் சமீப காலமாக பல படங்களில் துணை நடிகராகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட இவர் இயக்கிய 'நான் கடவுள் இல்லை' என்ற படம் வெளியானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இயக்குனரும் நடிகர் விஜயின் தந்தையுமான எஸ் ஏ சந்திரசேகர் இராமேஸ்வரம் ராமநாதசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்து புனித நீராடி வழிபாட்டார். இந்நிகழ்வில் எஸ் ஏ சந்திரசேகரை பத்திரிக்கையாளர் சூழ்ந்தனர். இதில் நடிகர் விஜயின் படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. எப்படி பார்க்கிறீர்கள்? என்ற கேள்விக்கு அவர், "அது கடவுள் கிருபை. என் தாய் தந்தையின் ஆசிர்வாதம்.. எங்களுடைய பிராத்தனை.. அவருடைய உழைப்பு, ஈடுபாடு.. எல்லாத்துக்குமே அதான.. நம்ம எந்தளவுக்கு உழைக்குறோமோ, உழைக்கும்போது கடவுள் நம்மை உயர்த்திட்டே போவாரு.. அதே நேரத்தில் அவர்களுக்கு கடவுளோட கிருபையும் வேண்டும்.” என்றார்.

மேலும் விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக மாறும்? என்ற கேள்விக்கு, "கோயிலுக்குள் கேட்க வேண்டிய கேள்வியை கேட்டீங்கனா பதில் சொல்வேன். கோயிலுக்குள் என்ன கேட்கனுமோ அதை மட்டும் கேளுங்கள்.. பதில் வரும்" என்றார் மேலும் அதை தொடர்ந்து சாமி தரிசனம் செய்து பிரசாதம் நடிகர் விஜய் க்கு சென்று சேருமா? என்று கேட்கையில் "கோவிலில் அர்ச்சனை செய்ய ராசி நட்சத்திரம் கேட்பார்கள். அப்போது முதலில் என்னுடைய ராசி, நட்சத்திரம் சொல்வேன். இரண்டாவது என் மகனுடைய ராசி சொல்வேன். அப்பறம்தான் என் மனைவி, மருமகள், பேரன், பேத்தி.. நான் செய்யுய் ஒவ்வொரு பிராத்தனையும் எனக்கானது மட்டுமல்ல, என்னுடைய மகனுடைய குடும்பத்திற்காகவும் என் மகனை விஸ்வாசிக்கின்ற மகன் மீது அன்பு வைத்திருக்கின்ற கோடண கோடி தமிழ் நெஞ்சங்கள் அத்தனை பேருக்காகவும் நான் வேண்டிக்கிறேன்". என்றார்.