தமிழ் சினிமாவில் சமூக நீதி கருத்துகளை அழுத்தமான திரைக்கதை மூலம் நேர்த்தியான திரைப்படமாக கொடுத்து ரசிகர்களிடம் பிரபலமடைந்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். அதன்படி ‘பரியேரும் பெருமாள்’, ‘கர்ணன்’ ஆகிய திரைப்படங்கள் இவர் இயக்கத்தில் வெளியாகி தமிழ் சினிமாவின் முக்கிய திரைப்படங்களாக அமைந்தது. அதை தொடர்ந்து இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஜூன் 29ம் தேதி வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’. ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிப்பில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி வெளியான மாமன்னன் திரைப்படம் உலகளவில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகபெரிய வரவேற்பை பெற்று இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் நமது கலாட்டா தமிழ் ஏற்பாடு செய்திருந்த மாரி செல்வராஜ் ரசிகர் கூட்ட சந்திப்பில் கர்ணன் படக்குழுவினர்களான தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு, நடிகர்கள் ரஜீஷா விஜயன், லஷ்மி ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் கர்ணன் படம் குறித்து பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர் . ‌இந்த சிறப்பு மிகு பேட்டியில் தனுஷ்மாரி செல்வராஜ் கூட்டணி குறித்து கேட்கையில் இயக்குனர் மாரி செல்வராஜ் பேசியது,

தனுஷ் சார் கூட படம் பண்றது கர்ணன் ரிலீஸுக்கு முன்னாடியே திட்டம் போட்டதுதான். அவரிடம் இதுகுறித்து முன்பே பேசி வெச்சது தான். கர்ணன் முடிச்சதும் அந்த படம் பண்ணலாம் னு முடிவு பண்ணோம். அதுக்கு முன்னாடி நீலம் தயாரிப்பில் ஒரு படம் ஒப்பந்தமாகிருந்தேன். அவருக்கு ரொம்ப பிடிச்சது. துருவ் படம் முடிச்சுட்டு தனுஷ் சார் படம் பண்ணலாம்னு இருக்கும்போது உதய் சார் கூட படம் பண்ற வாய்ப்பு வந்தது. உதய் சார் தான் தனுஷ் சார்கிட்ட போன் பண்ணி டேட் கேட்டார்.

தனுஷ் சார் நான் சீக்கிரம் முடிச்சிட்டு வந்துடுவாருனு நினைச்சார். ஆனால் மாமன்னன் நிறைய நாள் எடுத்தது. திரும்பவும் தனுஷ் சார்கிட்ட போய் ‘வாழை’ னு ஒரு படம் பண்ணனும் னு கேட்டேன். ரொப்ப நாளா அது என் மனசுலயே இருக்கு ஒரு 50 நாள் முடிச்சிடுவேன் னு சொன்னேன். அதுக்கு அவர் அப்பறம் என்ன பண்ண போறீங்க னு கேட்டார். நான் அப்பறம் துருவ் விக்ரம் படம் பண்ண போறேன். அப்பறம் தான் உங்க படம் னு சொன்னேன். அவர், உங்களுக்கு நல்ல விஷயம் நடக்கும் னா அது ஓகே.. ஆனால் ஒன்னு மட்டும் நியாபகம் வெச்சிக்கோங்க.. நீங்க எப்ப கூப்டாலும் வந்துடுவேன். என்னோட படங்கள் வரிசையை வெச்சு பாக்காதீங்க. னு அவர் சொன்னார். என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலும் தொடர்ந்து “தனுஷ் சார் படம் பண்ணனும் னா நல்ல நேரம் எடுத்து பண்ணனும். உதய் சாரை வெச்சு ஒரா விஷயம் சாத்யமாகிருக்கு. மீண்டும் நான் தனுஷ் சாரோட படம் பண்றேன்னா அது வேறு ஒரு இடத்துக்கு போகனும் எனக்கும் அது சவாலாக இருக்கனும். என்னோட எண்ணத்தை மாற்றனும் அதுக்கு நேரம் தேவைப்படும். பொதுவாகவே நான் படத்தோட முன்தயாரிப்பில் அதிகம் நேரம் எடுத்து கொள்ள மாட்டேன்.‌ஆனால் இந்த தனுஷ் சார் படத்தின் ஸ்கிரிப்ட் கே நிறைய நேரம் தேவைப்படும் னு நினைக்கிறேன். அது அப்பேற்பட்ட கதை னு அவரிடம் சொன்னேன். அவரும் அதுக்கு சரினு சொன்னார். நிச்சயமா அந்த படம் மிகப்பெரிய பாய்ச்சலா இருக்கும்என்றார் இயக்குனர் மாரி செல்வராஜ்.

மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் உடன் இணைந்து கர்ணன் படக்குழுவினர் கலந்து கொண்டு பல சுவாரஸ்யமான தவலை பகிர்ந்த கொண்ட தகவல் இதோ..