இந்திய சினிமாவின் தலை சிறந்த இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் இயக்குனர் இமயம் பாரதி ராஜா. எளிய மக்களின் வாழ்வியலை கட்சிதமாக படமாக்கி பல பிளாக் பஸ்டர்களை கொடுத்து தமிழ் சினிமாவில் மறுமலர செய்தவர் இயக்குனர் பாரதி ராஜா. 70 களின் பிற்பகுதியில் தொடங்கி இன்றைய நவீன காலம் வரை திரைத்துறையில் அயராமல் ஓடிக் கொண்டு ரசிகர்களின் மனங்களை கவர்ந்து வருகிறார். ஒரு இயக்குனராக மட்டுமல்லாமல் நடிகராகவும் சமீப காலமாக கவனம் பெற்றும் வருகிறார். சமீபத்தில் உலகளவில் பிரபலமான இணைய தொடரான மாடர்ன் லவ் தொடரின் சென்னை வெர்ஷன் தமிழ் இணைய தொடரில் ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்ற எபிசொடினை இயக்குனர் பாரதி ராஜா இயக்கியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனரும் நடிகருமான பாரதி ராஜா அவர்கள் நமது கலாட்டா ப்ளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் மாடர்ன் லவ் சென்னை இணைய தொடர் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதில் தமிழ் சினிமாவில் ஆளுமை வைரமுத்து அவர்களின் முதல் சந்திப்பு குறித்து அவர் பேசுகையில்,

"நிறம் மாறாத பூக்கள் படத்தை எடுக்க சிலோன் எடுக்க இடம் பார்க்க போயிருந்தேன். உபால்டு ஓவியர் ஒரு ஆளை கூட்டிட்டு வந்து பாட்டு எழுதுவாரு னு அறிமுகப்படுத்தினார். அந்த ஆள் எனக்கு ஒரு புத்தம் கொடுத்தான். 'திருத்திய எழுதிய தீர்ப்புகள் ' னு அவர் எழுதிய புத்தகத்தை கொடுத்து ஒரு வார்த்தை சொன்னான்.. 'முடிந்தால் என்னை பயன்படுத்து' என்றான்.. அவ்ளோ திமிரு.. ஒரு கவிஞன் வாய்ப்பு கேட்டு வரும்போது இவ்ளோ திமிரா னு யோசிச்சேன்.. அப்பறம் விமானத்தில் போவும் போது படிச்சேன்.. அப்பறம் பாட்டுக்காக உட்கார்ரோம். இளையராஜாவுக்கு அறிமுகப்படுத்தினேன்..அப்போ வைரமுத்து மொழிபெயர்ப்பு துறையில் இருந்தார். அப்போதே இளையராஜா விரும்பவில்லாமல் இருந்தார். பின் பாடலுக்கு சந்தம் எழுத சொன்னார். பின் கொஞ்சம் நேரம் வெளியே போனான்.. பேப்பர் வாங்கிட்டு போய் எழுதி 'பொன் மாலை பொழுது ' பாட்டை எழுதிட்டாரு.. பின் இளையராஜா வியந்து அவனை பற்றி பாராட்டி என்னிடம் சொன்னார். வைரமுத்து எழுதிய புத்தகத்தை புரட்டினால் ஒவ்வொரு பக்கமும் அருமையாக இருக்கும். அதில் ஒரு வரியும் வீணாகாது.. அது பாடலாக இருக்கட்டும்.. கட்டுரையாக இருக்கட்டும்.‌ மிகச்சிறந்த மனிதர். அவர் நமக்கும் தமிழுக்கும் கிடைத்த மிகப்பெரிய சொத்து.." என்றார் இயக்குனர் இமயம் பாரதி ராஜா.

மேலும் இயக்குனரும் நடிகருமான பாரதி ராஜா அவர்கள் நமது கலாட்டா ப்ளஸ் சிறப்பு பேட்டியில் கலந்து கொண்டு தனது திரைப்பயணம் குறித்தும் மாடர்ன் லவ் சென்னை இணைய தொடர் குறித்தும் பகிர்ந்து கொண்ட முழு வீடியோ இதோ..