தமிழ் திரையுலகில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர்கள் விஜய் மற்றும் அஜித் குமார். இருவரது ரசிகர்களும் ஆரம்ப காலம் தொற்றே இரு துருவங்களாக இருந்து வருகின்றனர். பாக்ஸ் ஆபிஸ் வசூலிலில் மாஸ் காட்சிகளிலும் ஒருவருக்கொருவர் குறைந்தவரல்ல. அப்படி இருக்கையில் இரு துருவங்களையும் ஒரே நேரத்தில் ஒரு படத்தில் ரசிகர்கள் பார்க்க தனி ஆவலுடன் இருக்கின்றனர்.‌ ஆரம்ப காலத்தில் 'ராஜாவின் பார்வையிலே' படத்தில் இருவரும் ஒன்றாக தோன்றியது குறிப்பிடத்தக்கது. ஆரம்ப காலங்களில் அது சரியாக இருந்தாலும் இன்று இருவரது உயரமும் வேறு தளத்தில் இருக்கையில் ஒரே படத்தில் எப்படி என்ற கேள்வியும் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஹாலிவுட் படங்களில் பெரிய நட்சத்திரங்கள் ஒரே படத்தில் தோன்றுவது போன்று இருவருக்கும் சமமான பங்கு படத்தில் இருந்திருந்தால் அந்த கதை நிச்சயம் ரசிகர்களை குஷிப்படுத்தும் என்று எண்ணி அந்த கதைக்காக ரசிகர்கள் காத்திருந்தனர். இந்நிலையில் இந்த முயற்சியினை இயக்குனர்கள் கௌதம் மேனன், விஷ்னு வர்தன், வெங்கட் பிரபு, ஏ ஆர் முருகதாஸ் போன்ற பல முன்னணி இயக்குனர்கள் முயற்சித்தனர். இருந்தும் எதுவும் சாத்தியமில்லாமல் போனது. இதுகுறித்து அஜித் விஜய் இருவரும் ஒன்றாக நடிக்க ஏற்ற கதையை வைத்திருக்கிறேன் என்று சொல்லிய இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் அவர்களிடம் நமது கலாட்டா பிளஸ் சிறப்பு பேட்டியின் போது கேட்கையில் அவர்,

"கண்டிப்பா இப்போ இருக்க சூழல் ல அந்த படம் பண்ண சாத்தியமில்லை.. என்ன காரணம் னா அஜித் , விஜய் இருவர்களை வைத்து படம் செய்தால் அது தனி தனி வியாபாரம். இது இரண்டும் சேர்ந்தால் இரண்டு மடங்கு ஆகும் என்பது கிடையாது. ஒருத்தருடைய தேதியை வீணடிக்குறது என்று சொல்லலாம். 200ரூபாய் கொடுத்து படம் பார்க்க வர அஜித் சார் ரசிகர் அஜித் அவர்களுடைய இருப்பு திரையில் அதிகம் இருக்க வேண்டும் என்று தான் நினைப்பார். அதே தான் விஜய் சார் ரசிகர்களும் எதிர்பார்ப்பார்கள். அந்த பிரித்து கொடுப்பது கஷ்டம். அதுக்கு தனி தனியா இவங்கள வெச்சு படம் பன்றது சிறப்பு. அவங்களுக்கு இருந்த கதை வேற மாதிரி மாறிடுச்சு.. இப்போ அந்த கதை பன்ற அளவு இருவரும் இல்ல. அவங்க வேற லெவல் வளர்ந்துட்டாங்க. அந்த கதை இன்னும் இருக்கு.. அந்த கதையை திருப்பி எடுத்து பார்த்தால் தெரியும். அந்த கதை நல்லா இருக்கா இல்லையா என்று.. " என்றார் ஏ ஆர் முருகதாஸ்

மேலும் இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் அவர்கள் தான் தயாரித்து வரும் ஏப்ரல் 14 ம் தேதி வெளிவரவிருக்கும் ஆகஸ்ட் 16 1947 படம் குறித்தும் தனது அடுத்தக்கட்ட திட்டம் குறித்து பகிர்ந்த முழு நேர்காணல் இதோ..