இந்திய சினிமாவின் மோஸ்ட் வாண்டட் கதாநாயகர்களில் ஒருவராகவும், ஆகச் சிறந்த நடிகராகவும், பல கோடி ரசிகர்களின் ஃபேவரட் ஹீரோவாகவும் திகழும் நடிகர் தனுஷ் அடுத்ததாக தனது சகோதரரும் இயக்குனருமான செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். நானே வருவேன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகும் திருச்சிற்றம்பலம் படத்திலும் நடித்து வரும் தனுஷ் நடிப்பில் ஹாலிவுட்டில் தயாராகியுள்ள தி கிரேட் மேன் திரைப்படம் விரைவில் நேரடியாக நெட்ஃபிளிக்ஸில் ரிலீஸாகவுள்ளது. இந்த வரிசையில் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளில் தனுஷ் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் வாத்தி (SIR).

பிரபல தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் வாத்தி படத்தை சித்தாரா எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரிக்கின்றனர். தனுஷுடன் இணைந்து சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடிக்க, சாய்குமார், தனிக்கெல்லா பரணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஜீவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.

வாத்தி திரைப்படத்தின் படப்பிடிப்பும் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில், இயக்குனர் வெங்கி அட்லுரியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் நடிகர் தனுஷ் ஷூட்டிங் ஸ்பாட்டில் வெங்கி அட்லுரியுடன் இருக்கும் புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு இயக்குனருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வரும் வாத்தி படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம் இதோ…

Wishing a very happy birthday to venky atluri director of my first Tamil/telugu bilingual Vaathi / Sir. God bless you venky. Have a blast. pic.twitter.com/XeyPsJ5WGd

— Dhanush (@dhanushkraja) April 6, 2022