தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது அத்ரங்கி ரே,மாறன் படங்கள் வெளியாகி நல்ல சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

சித்தாரா என்டேர்டைன்மென்ட்ஸ் மற்றும் Fortune Four சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படம் வாத்தி,SIR.இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.இந்த படம் தமிழ்,தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்றும் பெயரிட்டுள்ளனர்.

மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.தற்போது இந்த படத்தின் பாடல் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக ஜீ.வி.பிரகாஷ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.இந்த புகைப்படம் செம வைரலாகி வருகிறது.

#vaathi song recording on progresssss @dhanushkraja #venkyatluri @SitharaEnts @vamsi84 … some heavy dance coming up 🔥🔥 pic.twitter.com/e7q70a0bUQ

— G.V.Prakash Kumar (@gvprakash) June 17, 2022