தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் மாறன் படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து தனுஷ் தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

தனுஷ் Netflix தயாரிப்பில் உருவாகும் The Gray Man என்ற ஹாலிவுட் படத்தில் நடிக்கிறார்.இந்த படத்தினை avengers படத்தினை இயக்கிய Russo Brothers இயக்குகின்றனர்.உலகிலேயே அதிக பட்ஜெட் கொண்ட படமாக இந்த படம் உருவாகி வருகிறது.இந்த படத்தில் Chris Evans,Ryan Gosling உள்ளிட்ட பல முன்னணி ஹாலிவுட் நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

தி கிரே மேன் ஜூலை 22 ஆம் தேதி நேரடியாக Netflix-ல் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.பெரிய எதிர்பார்ப்புக்கிடையே இந்த படத்தின் அதிரடியான ட்ரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று இந்த படத்தின் ட்ரைலரை கீழே உள்ள லிங்கில் காணலாம்

Yaaru nu paarkama kola pannuravana evan kolluvan? Oru padai ae thevai padum! #TheGrayMan, coming to Netflix in Tamil on 22nd July. pic.twitter.com/U7JWmfiZKb

— Netflix India South (@Netflix_INSouth) May 24, 2022