தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவரது நடிப்பில் கடைசியாக அத்ரங்கி ரே படம் வெளியானது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,வாத்தி,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம்,வாத்தி என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

மாறன் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளனர்.கார்த்திக் நரேன் இந்த படத்தினை இயக்கியுள்ளார், ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.இந்த படத்தில் ஹீரோயினாக மாளவிகா மோஹனன் நடித்துள்ளனர்.இந்த படத்தில் ஸ்ம்ருதி வெங்கட்,சமுத்திரக்கனி,மஹேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் மார்ச் 11ஆம் தேதி வெளியாகவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தில் திரைக்கதை மற்றும் வசனங்களில் உதவியாக பிரபல பாடலாசிரியர் விவேக் பணியாற்றி வந்தார்.நேற்று சில காரணங்களால் இந்த படத்தில் பாடலாசிரியர் தவிர மற்ற பொறுப்புகளில் இருந்து விலகுவதாக விவேக் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Very happy to see so much, such love towards #Maaran trailer n Dialogues. As many of U hav pointed out, maaran is coming out as a stylish, commercial n emotional film. I m equally excited to watch d film like U

But those dialogues r not mine. Credits to the dialogue writer

(1) https://t.co/t4SEgO7WjT

— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022

Due to creative differences i chose to move out of #Maaran as a dialogue n screenplay writer. Thanks team for respecting my decision. Today I am part of some of d biggest movies in india as a dialogue n screenplay writer. Wil always remember dat Maaran was d starting point😘

(2)

— Vivek (@Lyricist_Vivek) March 4, 2022