பேட்ட படத்தின் வெற்றியை அடுத்து கார்த்திக் சுப்புராஜ் தனது அடுத்த படத்தில் தனுஷுடன் இணைகிறார்.2016-லேயே தொடங்க வேண்டிய இந்த படம் சில காரணங்களால் தள்ளி போனது.Y Not ஸ்டுடியோஸ் நிறுவனம் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.


D40 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி ஹீரோயினாக நடிக்கிறார்.சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்ககிறார்,இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் லண்டனில் நடைபெற்று வந்தது.



இந்த படத்தில் கலையரசன்,மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.இந்த படத்தின் ஷூட்டிங் தற்போது நிறைவடைந்துள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.64 நாட்களில் இந்த படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

#YNOT18

And that’s a wrap ....
Longest toughest craziest 64 days of non stop shoot in UK .... done

🙏🏼

Thanks to the entire team @dhanushkraja @karthiksubbaraj @sash041075 @chakdyn @Music_Santhosh @AishwaryaLeksh4 @RelianceEnt @APIfilms @onlynikil @StudiosYNot #D40 pic.twitter.com/mJ415V3ugK

— Sash (@sash041075) November 7, 2019