தனுஷ் நடிப்பில் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் எனை நோக்கி பாயும் தோட்டா.மேகா ஆகாஷ் இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.டர்புகா சிவா இந்த படத்துக்கு இசையமமைத்துள்ளார்.Escape Artist நிறுவனம் சார்பாக மதன் இந்த படத்தை தயாரித்துள்ளார்.

இந்த படத்தின் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.சசிகுமார்,சுனைனா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.பல காரணங்களால் பல முறை தள்ளிபோன இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது ஆனால் செப்டம்பரிலும் படம் வெளியாகவில்லை.

தற்போது இந்த படத்தின் வெளியீட்டு உரிமையை வேல்ஸ் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.இந்த படம் வரும் நவம்பர் 29ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து பதிவிட்ட கெளதம் மேனன் இந்த படத்தை பார்த்த இசாரி கணேஷ் இந்த படத்தை ரிலீஸ் செய்ய சம்மதித்துள்ளார் என்று தெரிவித்தார்.

The Most expected movie of the year #EnaiNokiPaayumThota Will be released worldwide on Nov 29th.@VelsFilmIntl #VelsFilm #ENPT #ENPTFromNov29th @dhanushkraja @menongautham @akash_megha @SasikumarDir @TheSunainaa @DarbukaSiva @EscapeArtists_ pic.twitter.com/trxm5W9Rq4

— Vels Film International (@VelsFilmIntl) November 2, 2019

Thanking @isharikganesh sir for helping me ‘realise my vision’ & for coming on board to release #ENPT.
He saw ENPT & liked it & we’ve agreed to take a journey forward together. More announcements to follow.
JOSHUA is not YOHAN but an equally big idea that needed a big producer

— Gauthamvasudevmenon (@menongautham) November 2, 2019