தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.இவர் நடித்துள்ள அத்ரங்கி ரே படம் இன்று OTT-யில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,வாத்தி,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

இவற்றை தவிர அடுத்ததாக ராட்சசன் இயக்குனருடன் ஒரு படம்,அருண் மாதேஸ்வரனுடன் ஒரு படம் என்று அறிவிக்கப்படாத சில படங்களும் இருக்கின்றன.தற்போது தனுஷ் இயக்குனர் அருண் மாதேஸ்வரனுடன் இணையும் படத்தினை உறுதி செய்துள்ளார்.அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ராக்கி படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் அருணுடன் இணைவதை தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதிசெய்துள்ளார் தனுஷ்.ராக்கி படத்தினை தொடர்ந்து அருண் இயக்கத்தில் உருவான சாணி காயிதம் படமும் விரைவில் வெளியாகவுள்ளது.இந்நிலையில் அருண் மாதேஸ்வரன் தனுஷ் படத்தின் அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கடப்படுகிறது.

Yes. The speculations are true. I am that fortunate actor who bagged @ArunMatheswaran ‘s next directorial. More details soon. Om Namashivaaya

— Dhanush (@dhanushkraja) December 24, 2021