தமிழ் சினிமாவின் தன்னிகரற்ற நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் தனுஷ்.ஒவ்வொரு படத்திலும் ஏதேனும் ஒன்றை ட்ரை செய்து தமிழ் சினிமாவை வேற லெவெலிற்கு எடுத்து செல்லும் சில நடிகர்களில் ஒருவராக தனுஷ் இருக்கிறார்.கடைசியாக இவரது கர்ணன் படம் திரையரங்குகளில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனுஷ் மாறன்,அத்ராங்கி ரே,ராட்சசன் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம்,தி கிரே மேன்,செல்வராகவன் இயக்கத்தில் வி க்ரியேஷன் தயாரிப்பில் நானே வருவேன்,வெற்றிமாறனுடன் ஒரு படம்,சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் திருச்சிற்றம்பலம்,ஆயிரத்தில் ஒருவன் 2,சேகர் கம்முலா இயக்கத்தில் ஒரு படம் என்று ஒரு தனி லிஸ்டே வைத்துள்ளார் தனுஷ்.

இவர் நடித்துள்ள அத்ரங்கி ரே திரைப்படம் வரும் டிசம்பர் 24ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை அடுத்து மாறன்,திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்கள் அடுத்தடுத்து வெளியாகவுள்ளன.தனுஷ் நடிக்கும் புதிய படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது.சித்தாரா என்டேர்டைன்மென்ட்ஸ் மற்றும் Fortune Four சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் தனுஷ்.

இந்த படத்தை வெங்கி அட்லூரி இயக்குகிறார்.இந்த படம் தமிழ்,தெலுங்கில் bilingual ஆக உருவாகிறது.இந்த படத்திற்கு தமிழில் வாத்தி என்றும் தெலுங்கில் Sir என்றும் பெயரிட்டுள்ளனர்.மலையாள நடிகை சம்யுக்தா மேனன் ஹீரோயினாக நடிக்கிறார்.ஜீ.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் டைட்டில் லுக் வெளியிடப்பட்டு ரசிகர்களிடம் லைக்குகளை அள்ளி வருகிறது.

My next .. a Tamil , telugu bilingual #Vaathi #sir pic.twitter.com/QAnfs9P9yC

— Dhanush (@dhanushkraja) December 23, 2021

#vaathi #sir title motion poster pic.twitter.com/0oOnUPQpTH

— Dhanush (@dhanushkraja) December 23, 2021