தளபதி விஜய் ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கும் தளபதி விஜயின் 67வது திரைப்படமான லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. மாஸ்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஐந்தாவது முறையாக த்ரிஷா உடன் இணைந்து நடித்திருக்கிறார். மேலும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தட் ஆக்சன் கிங் அர்ஜுன் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குனர் மிஷ்கின் பிரியா ஆனந்த் மன்சூர் அலிகான் இயக்குனர் அனுராக் கஷ்யப் சாண்டி மாஸ்டர் உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர்கள் பட்டாளமே நடித்திருக்கும் இந்த லியோ திரைப்படத்திற்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்ய பிலோமின் ராஜ் படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

பக்கா அதிரடி ஆக்சன் பிளாக் திரைப்படமாக அன்பறிவு மாஸ்டர்கள் ஸ்டன்ட் இயக்கம் செய்திருக்கும் லியோ திரைப்படத்திற்கு ராக்ஸ்டார் அனிருத் இசை அமைத்திருக்கிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு ரத்து செய்யப்பட்டு இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பல போலியான டிக்கெட்டுகள் சமூக வலைதளங்களில் உலா வந்த காரணத்தினாலும் பல்வேறு பாதுகாப்பு காரணங்கள் கருதியும் இசை வெளியீட்டு விழாவை படக்குழு ரத்து செய்து இருக்கிறது. இதனால் தளபதி விஜயின் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து இருக்கின்றனர். இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரதேசமாக பேட்டி கொடுத்த பிரபல தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அவர்கள் லியோ திரைப்படம் குறித்து பல சுவாரசியமான தகவல்களை நம்மோடு கொண்டு பகிர்ந்து கொண்டார்.

அந்த வகையில் பேசியபோது, ஜவான் படத்தின் விழாவில் கூட அனிருத் சார் சொல்லியிருந்தார் அடுத்து லியோ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சந்திக்கலாம் என்று.. அப்படி நாளுக்கு நாள் எதிர்பார்ப்புகள் அதிகரித்துக் கொண்டிருந்த சமயத்தில் திடீரென ரத்து செய்யப்பட்டிருக்கிறது? என கேட்டபோது, “ரசிகர்கள் உடைந்து விட்டார்கள் என சொல்ல முடியாது ஏனென்றால் தளபதி விஜய் அவர்களை நாம் எல்லாம் பார்க்க முடியவில்லை எல்லோருமே அவரை பார்க்க முடியாது சினிமாவில் அவரை நாம் பார்க்கிறோம் அது நாம் எப்போதும் பார்க்கிறோம். நாம் நேரடியாக எப்போது விஜய் சாரை பார்க்க போகிறோம் ஒரு சாதாரண மனிதராக எப்போது பார்க்க போகிறோம் என்றால் ஒரு இசை வெளியீட்டு விழாவில்.. முன்பெல்லாம் நிறைய ப்ரோமோஷன்கள் பண்ணுவார் இப்போதெல்லாம் எல்லாம் குறைத்துக் கொண்டு ஒரு விழா தான் செய்கிறார். அந்த விழாவும் இல்லையென்றால் கண்டிப்பாக ஏமாற்றம் அடைவார்கள் அல்லவா அங்கே ஒரு 5000 பேர் தான் 1000 பேர் தான் இருப்பார்கள் என்றாலும் அது பிரச்சனை இல்லை அது வீடியோவாக வெளியில் வரும். அது ஒரு பெஞ்ச் மார்க் நிகழ்வாக இருக்கும் அவர் எந்த விழாவில் பேசுவது வரை பேசும் விஷயமாக இருக்கிறது.” என தெரிவித்துள்ளார். இன்னும் பல முக்கிய விஷயங்களை பகிர்ந்து கொண்ட தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.