பேட்ட படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றியை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார்.லைகா ப்ரொடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் பொங்கலை ஒட்டி நேற்று வெளியானது.

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்துள்ளார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் ரஜினி ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

இதில் இடம்பெறும் வசனம் ஒன்றை சசிகலாவை குறிப்பிடுவதாகவும் அதனை நீக்காவிட்டால் ரஜினி மற்றும் முருகதாஸ் மீது வழக்கு தொடரப்போவதாக சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்திருந்தார்.

தற்போது படக்குழுவினர் இந்த விவகாரம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர் அதில் சிறைச்சாலையில் இருந்து கைதிகள் வெளியேறுவது குறித்த வசனம் பொதுவாக எழுதப்பட்டதே தவிர யாரையும் குறிப்பிடுவதோ யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டது இல்லை.இருப்பினும் இந்த வசனம் சிலரது மனதை மனதை புண்படுத்துவதாக கருதுவதால் அந்த வசனம் நீக்கப்படும் என்று படக்குழுவினர் அதில் தெரிவித்துள்ளனர்.

#DARBAR @rajinikanth @ARMurugadoss #Nayanthara @anirudhofficial @santoshsivan @sreekar_prasad #Santhanam @SunielVShetty #DarbarThiruvizha #DarbarRunningSuccessfully 💥🔥 pic.twitter.com/zj6Mcwsxu3

— Lyca Productions (@LycaProductions) January 10, 2020