Copyright Galatta.com. All rights reserved.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 167-வது படமான தர்பார் படத்தை AR முருகதாஸ் இயக்கி வருகிறார். இதற்கு ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கிறார். நயன்தாரா, யோகிபாபு, பிரதீக், சுனில் ஷெட்டி, நிவேதா தாமஸ், யோக்ராஜ் சிங் போன்ற நட்சத்திரங்கள் சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.
ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பல வருடங்களுக்குப் பிறகு ரஜினி காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார். படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது.
படத்தின் டப்பிங் பணிகளை ரஜினிகாந்த் முடித்துவிட்டார் என்ற தகவல் சமீபத்தில் தெரியவந்தது. தற்போது படத்தின் ஓப்பனிங் பாடல் சும்மா கிழி என்பது தெரியவந்தது. பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடுகிறார் என்பது நாம் அறிந்தவையே.