சரக்கு திரைப்படத்தின் பட விழாவில் நடிகர் கூல் சுரேஷ் தொகுப்பாளனிக்கு மாலை போட்டதற்கு மேடையிலேயே அவரைக் கண்டித்து மன்சூர் அலிகான் அவர்கள் மன்னிப்பு கேட்க வைத்திருக்கிறார். தமிழ் சினிமாவின் மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான் வில்லன் நடிகராக விரட்டிய மன்சூர் அலிகான் அவர்கள் தொடர்ந்து பல விதமான கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகராக தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் விரைவில் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி ரிலீஸாக இருக்கும் தளபதி விஜயின் லியோ படத்தில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மன்சூர் அலிகான் மிக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். நடிகராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராக ராவணன், வாழ்க ஜனநாயகம், என்னைப் பார் யோகம் வரும், அதிரடி உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருக்கும் மன்சூர் அலிகான் அவர்களின் தயாரிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் திரைப்படம் தான் சரக்கு.

மன்சூர் அலிகான் அவர்கள் தயாரித்து நடிக்கும் சரக்கு படத்தில் வலீனா, யோகி பாபு, இயக்குனர் கே.பாக்கியராஜ், இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், மொட்டை ராஜேந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அருள் வின்சென்ட் மற்றும் மகேஷ்.T இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் சரக்கு திரைப்படத்திற்கு தேவராஜ் படத்தொகுப்பு செய்ய, சித்தார்த் விபின் இசை அமைத்திருக்கிறார். கனல் கண்ணன் ஸ்டண்ட் இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களை எழுச்சூர் அரவிந்தன் எழுதியிருக்கிறார். சரக்கு திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா நேற்று செப்டம்பர் 19ஆம் தேதி சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டு பேசினார். அப்போது மேடையில் பேச வந்த நடிகர்கள் சுரேஷ் தனக்கு அணிவிக்கப்பட்ட மாலையை திடீரென தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த பெண் தொகுப்பாளனிக்கு அனுமதியின்றி போட்டுவிட்டார்.

எதிர்பாராத வகையில் நடிகர் புல் சுரேஷ் செய்த இந்த செயலால் தொகுப்பாளனி மிகுந்த எரிச்சல் அடைந்து அடுத்த நொடியே மேடையில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அனைவருமே ஸ்கூல் சுரேஷின் செயலை கண்டித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில், மன்சூர் அலிகான் அவர்கள் மேடையிலேயே தோல் சுரேஷின் அந்த செயலை கண்டித்து மன்னிப்பும் கேட்க வைத்தார். அதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் கேட்டுக் கொண்டதன் பேரில் கூல் சுரேஷ் மேடையில் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும் கூல் சுரேஷின் இது மாதிரியான செயல்கள் மிகவும் கண்டிக்கத்தக்கது என சமூக வலைதளங்களில் பலரும் அந்த வீடியோவை குறிப்பிட்டு பதிவிட்டு வருகின்றனர். அந்த வீடியோ இதோ…