தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திர நாயகராக திகழும் தளபதி விஜய் அடுத்ததாக முதல் முறை தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் #தளபதி66 படத்தில் நடிக்கிறார். முன்னணி தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகும் #தளபதி66 திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.

தளபதி விஜயுடன் இணைந்து நடிகை ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு தமன்.S இசையமைக்கிறார். முன்னதாக சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் தமிழ் புத்தாண்டு வெளியீடாக கடந்த ஏப்ரல் 13ம் தேதி உலகமெங்கும் ரிலீஸானது.

தளபதி விஜய்க்கே உரித்தான ஸ்டைலான ஆக்ஷனில் வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் போட்டியாளரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் பிரபலமான சிவாங்கி தளபதி விஜய் உடன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

முன்னதாக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டான் மற்றும் இயக்குனர் R.கண்ணன் இயக்கத்தில் தயாராகியுள்ள காசேதான் கடவுளடா உள்ளிட்ட படங்களில் முக்கிய வேடங்களில் நடித்துள்ள சிவாங்கி பீஸ்ட் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் தளபதி விஜய்யை நேரில் சந்தித்த போது எடுத்த புகைப்படங்களை தற்போது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படங்கள் இதோ…

This happened 🥶🥶 Thankyou @actorvijay sir for the kind words❤️ @Siva_Kartikeyan anna thankyou na❤️ pic.twitter.com/CwbLZcCQoW

— Sivaangi Krishnakumar (@sivaangi_k) April 26, 2022