தமிழக தொலைக்காட்சிகளில் முன்னணி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் எப்போதுமே மற்ற சேனல்களுக்கு முன்னோடியாகவும் போட்டியாகவும் இருந்து வருகிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த சின்னத்துரை ரசிகர்களின் ஃபேவரட்டான ரியாலிட்டி நிகழ்ச்சியாக கொண்டாடப்படும் நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி நிகழ்ச்சி.

இதுவரை மூன்று சீசன்கள் நிறைவடைந்துள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் கடந்த வாரம் தொடங்கியது. இந்த 4 வது சீசனில் போட்டியாளர்களாக ஆண்ட்ரேன் நோக்ரியாட், ஜிகர்தண்டா நடிகர் காளையன், இயக்குனரும் நடிகருமான கிஷோர் ராஜ்குமார், வலிமை பட நடிகர் ராஜ் ஐயப்பா, நடிகை ஷெரின், நடிகை ஷ்ருஷ்டி டாங்கே, நடிகை விசித்ரா, VJ விஷால் ஆகியோர் களமிறங்கினர்.

இவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும் கோமாளிகளாக மக்களை ரசிக்க வைக்க இந்த முறை மணிமேகலை, புகழ், குரேஷி, சுனிதா, GPமுத்து, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், ரவீனா, மோனிஷா பிளஸ்சி ஆகியோர் களமிறங்கினர். மக்கள் மனதில் தனக்கென தனி இடம் பிடித்த குக் வித் கோமாளியின் பிரபலங்கள் ஒவ்வொருவரும் தங்களது கரியரிலும் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துள்ளனர்.

அந்த வகையில் தொடர்ந்து திரைப்படங்களிலும் குக் வித் கோமாளியின் பிரபலங்கள் நடிகர்களாக தங்களுக்கான இடத்தைப் பெற முன்னேறி வருகின்றனர். மேலும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய புகழ் மற்றும் மணிமேகலை போன்றோர் தங்களது வாழ்க்கையில் அடுத்த கட்டமாக தங்களது முதல் காரை வாங்கினர்.

இந்த வரிசையில் தற்போது குக் வித் கோமாளி இரண்டாவது சீசனில் இருந்து ரசிகர்களிலேயே மிகப் பிரபலமடைந்த சக்தி இணைந்துள்ளார். குக் வித் கோமாளிக்கு பிறகு தற்போது திரையுலகிலும் ENTRY கொடுத்துள்ள சக்தி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் ஃபர்ஹானா படத்தின் மூலம் நடிகராகவும் களமிறங்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தனது கனவுகளில் ஒன்றான தனது முதல் காரை தற்போது சக்தி தனது கடின உழைப்பால் தனக்கு சொந்தமாக்கி இருக்கிறார். புகழுடன் சென்று தனது முதல் காரை வாங்கிய இந்த மறக்க முடியாத நிகழ்வை தனது சமூக வலைதள பக்கங்களில் சக்தி வெளியிட்டுள்ளார். அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சக்தியின் அந்த புதிய கார் வாங்கிய பதிவு இதோ…