சமீப காலமாக திரைப்படங்கள் அனைத்தும் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய வேண்டும். மேலும் பாக்ஸ் ஆபீஸ் வேட்டையை தீவிர படுத்தவும் நிறைய திரைப்படங்கள் பல மொழிகளில் படமக்கப்பட்டும் மொழி பெயர்க்கபட்டும் வெளியிடப்பட்டு வருகிறது. அப்படி வெளியாகும் திரைப்படங்களை பான் இந்திய திரைப்படங்கள் என்றழைக்கின்றனர் ரசிகர்கள் மற்றும் திரையுலகினரும்.. அதன்படி கடந்த சில ஆண்டுகளாக வெளியாகும் திரைப்படங்கள் பான் இந்திய திரைப்படங்களாக வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெற்றுள்ளது. உதாரணமாக ‘கேஜிஎப்’, ‘ஆர் ஆர் ஆர்’, ‘பொன்னியின் செல்வன்’, ‘காந்தாரா’, ‘புஷ்பா’ ஆகிய திரைப்படங்கள் மக்களிடம் அதிகம் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது. மக்களிடம் பான் இந்திய திரைப்படங்கள் என்றாலே தனி எதிர்பார்ப்பு உருவாகி விடுகிறது. அதன்படி வரும் காலங்களில் வெளியாகவுள்ள பான் இந்திய திரைப்படங்களின் பட்டியல் மற்றும் அதன் வெளியீட்டு தேதியை விளக்குகிறது இந்த தொகுப்பு..

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன் நாவல் படமக்கப்படவேண்டும் என்ற தமிழ் சினிமாவின் மாபெரும் கனவை மணிரத்தினம் பல முயற்சிகளுக்கிடையே கையிலெடுத்து மிகப்பெரிய பொருட்செலவில் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களை வைத்து படமாக்கினார். லைகா தயாரிப்பில் ஏ ஆர் ரஹ்மான் இசையில் பொன்னியின் செல்வன் முதல் பாகம் கடந்த ஆண்டு வெளியானது. தமிழ் படமான ‘பொன்னியின் செல்வன்’ உலக அளவில் பல மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாகி மக்களிடம் பரவலாக நல்ல வரவேற்பு கிடைத்தது. வசூல் அளவில் இமாலய அளவில் குவித்து வந்தது பொன்னியின் செல்வன். முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாகியது. இந்நிலையில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர். வரும் நாட்களில் படத்திற்கான பாடல்கள் மற்றும் டிரைலர் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜவான்

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரும் தளபதி விஜய்க்கு நெருக்கமானவருமானவர் இயக்குனர் அட்லீ. தமிழில் தொடர் வெற்றிக்கு பின் அடுத்ததாக இயக்கபோகும் திரைப்படம் ‘ஜவான்.இப்படத்தில் இந்தியாவின் மிக பெரிய நட்சத்திரம் பாலிவுட் கிங் கான் என்றழைக்கப்படும் ஷாருக் கான் நடிக்கவுள்ளார். இயக்குனர் அட்லீ முதல் முறை பாலிவுட்டில் கால் பதிக்கிறார் என்பதால் இப்படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஷாருக் கானின் முந்தைய படமான பதான் உலகளவில் வசூலில் வெறித்தனமாக வேட்டையாடுவதால் இந்த படத்திற்கு அதன் தாக்கம் எதிர்பார்பாய் மாறியுள்ளது. அனிரூத் இசையில் படமாக்கப்படும் இப்படத்தில் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, பிரியா மணி, யோகி பாபி உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். இந்திய அளவில் மிகபெரிய எதிர்பார்ப்பை கொண்டுள்ள ஜவான் திரைப்படம் வரும் ஜூன் 2 ம் தேதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதிபுருஷ்

ராமாயணத்தை தழுவி பிரபாஸ் நடிக்கும் திரைப்படம் ‘ஆதிபுருஷ்’. இந்தியிலும் தெலுங்கிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்படும் இப்படம் தமிழ், கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் டப் செய்யப்படுகிறது. ஓம் ராவத் இயக்கத்தில் மிக பிரமாண்டமாய் 3D தொழில் நுட்பத்தில் உருவான இப்படத்தின் டீசர் முன்னதாக வெளியாகி மிகப்பெரிய விமர்சனத்தை பெற்றது. அதனையடுத்து மீண்டும் ரீ எடிட் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. இந்த ஆண்டு ஜனவரி வெளியாகவேண்டிய ஆதிபுருஷ் திரைப்படம் தற்போது ஜூன் மாதம் 16 ம் வெளியாகவுள்ளதாக தகவல்.

கிங் ஆப் கோதா

துல்கர் சல்மான் நடிப்பில் பான் இந்திய திரைப்படமாக உருவாகவிருக்கும் ‘கிங் ஆப் கோதா’ திரைப்படம் கேங்க்ஸ்டர் கதைகளத்தில் உருவாகவுள்ளதாக முன்னதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ரசிகர்களிடம் எழுந்தது. பல மொழிகளில் இந்தியா முழுவதும் இப்படம் வரும் ஆகஸ்ட் 24 ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சலார்

‘கேஜிஎப்’ திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின் இயக்குனர் பிரசாந்த் நீல் பான் இந்திய ஸ்டார் பிரபாஸுடன் இணைந்துள்ள திரைப்படம் ‘சலார் மிகபிரம்மாண்டமாய் உருவாகி வரும் இப்படத்திற்கு இந்திய அளவில் ரசிகர்கள் எதிர்பார்ப்பை வைத்துள்ளனர். மும்முரமாக நடைபெற்று வரும் இப்படம் வரும் செப்டெம்பர் மாதம் 28 ம் தேதி வெளியாகவுள்ளது.

லியோ

‘மாஸ்டர்’ வெற்றி திரைப்படத்திற்கு பின் இணைந்துள்ள இயக்குனர் லோகேஷ் கனகாராஜ் தளபதி விஜய் கூட்டணி தற்போது‘லியோ’ படத்தின் மூலம் இணைந்துள்ளது. அனிரூத் இசையில் செவென் ஸ்க்ரீன் தயாரிக்கும் இப்படத்தின் முன்னோட்டம் முன்னதாக வெளியாகி வரவேற்பை பெற்றது. தற்போது மும்முரமாக காஷ்மீர் பகுதிகளில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. தளபதி விஜயின் வாரிசு திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் பெற்று மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த வெற்றியையடுத்து தற்போது விஜய் நடிக்கும் லியோ படத்திற்கு இந்திய அளவு வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லியோ திரைப்படம் வரும் அக்டோபார் மாதம் 19 தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

கேப்டன் மில்லர்

நடிகர் தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கி வரும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. விறுவிறுப்பாக பிரம்மாண்ட செட்டில் நடைபெற்று கொண்டிருக்கும் இப்படம் வரும் தீபாவளி தினத்தையொட்டி வெளியாகும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் உருவாகி வரும் இப்படத்திற்கு தனுஷ் வித்யாசமான தோற்றத்தில் நடிக்கவுள்ளார். முன்னதாக படத்தின் படப்பிடிப்பு முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

புரோஜக்ட் கே

கடந்த 2018 ம் ஆண்டு பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமாக வெளிவந்து வெற்றி பெற்ற 'நடிகையர் திலகம்' திரைப்படத்தின் இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கி வரும் 'Project K' படத்தில் நடிகர் பிரபாஸ், அமிதாப் பச்சன் மற்றும் தீபிகா படுகோனே நடித்து வருகிறார். வைஜெயந்தி மூவீஸ் தயாரித்து வரும் இப்படம் பிரம்மாண்டமாக இந்திய முழுவதும் அடுத்தாண்டு ஜனவரி 12 ம் தேதி வெளியாகவுள்ளது. அதிரடி ஆக்ஷன் காட்சிகளுடன் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சூர்யா 42

இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் 3D தொழில்நுட்பத்தில் வராலாற்று பின்னணியில் உருவாகும் திரைப்படம் ‘சூர்யா 42’.சென்னையில் மும்முரமாக நடைபெற்று வரும் இப்படம் மிக பிரம்மாண்டமான தொழில்நுட்பங்களுடன் தயாராகி வருகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் உருவாகும் இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் வெளியீடாக வெளியாகவுள்ளது. மேலும் சூர்யா 42 திரைப்படம் 10 மொழிகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. நாளுக்கு நாள் எதிர்பார்ப்பை எகிர வைக்கும் இப்படம் நிச்சயம் தமிழ் சினிமாவில் கவனிக்கத்தக்க படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜெயிலர்

இந்தியாவின் முன்னணி நடிகரான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ‘ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். ரஜினிகாந்த் உடன் இணைந்து மோகன் லால், சிவராஜ் குமார், சுனில், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி நடிகர்களை படத்தில் முக்கிய கதாபாத்திரமாக இணைத்து உருவாகி வரும் இப்படம் பான் இந்திய திரைப்படமாக அடுத்தாண்டு பொங்கலையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிரூத் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியன் 2

1996 இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘இந்தியன்’ திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்ற இந்தியன் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லைகா தயாரிப்பில் உருவாகி வரும் ‘இந்தியன் 2’ திரைப்படத்திற்கு அனிரூத் இசையமைக்கவுள்ளார். மேலும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை கொண்டு உருவாகியிருக்கும் இப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தையொட்டி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புஷ்பா 2

கடந்த 2021 ல் தெலுங்கு திரைப்படமாக வெளியான ‘புஷ்பா’ திரைப்படம் இந்தியாவில் அனைத்து மொழிகளிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அனைத்து மொழியிலும் பாக்ஸ் ஆபீஸ் அடித்து மிகப்பெரிய வெற்றியை பெற்றது புஷ்பா. இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சுகுமார் இயக்கத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள புஷ்பா 2 திரைப்படம் அடுத்தாண்டு பான் இந்திய திரைப்படமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.