தமிழ் திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராகவும் வடிவேலு விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் இணைந்து பணியாற்றிய சக நடிகராகவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த முகமாக இருந்து வருபவர் பவா லக்ஷ்மணன்.தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் வடிவேலு. இவரது பெரும்பாலான காமெடி காட்சிகளில் முக்கியமான நபராக பங்கு பெறுபவர் பவா லக்ஷ்மணன். இருவரது கூட்டணியில் இடம் பெரும் காட்சிகள் இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். அதன்படி குறிப்பாக மாயி படத்தில் இடம் பெற்ற வா மா மின்னல் காட்சி இன்றும் ரசிகர்களால் சிரிப்பில் கொக்கரிக்கப்படும் காட்சியாக பார்க்கப் படுகிறது. அதை தொடர்ந்து அரசு படத்தில் குடிகாரன் கதாபாத்திரமும் மறக்க முடியாதது. வடிவேலு விவேக் உடன் பணியாற்றியது ஒருபுறம் இருந்தாலும் தனியாக பல படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக ஆனந்தம் படத்தில் பவா லக்ஷ்மணன் கதாபாத்திரம் அதிகம் கவனம் ஈர்த்தது.

சில நாட்களாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்த பவா லக்ஷ்மணன் சிறு சிறு நிகழ்சிகளில் கலந்து கொண்டு வந்துள்ளார். சமீப காலமாக சக்கரை நோயினால் அவதிப்பட்டு வந்த பவா லக்ஷ்மணன் நோய் முற்றி போக சென்னையில் உள்ள ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின் சிகிச்சையில் அவரது கால் கட்டை விரல் அகற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

இதையறிந்து ரசிகர்கள் அதிர்ந்து போக பின் பவா லக்ஷ்மணன் உடல் நலம் பூரண குனமடைய பிராத்தனைகளும் செய்து வந்தனர். மேலும் முன்னணி நடிகர்கள் அவரது மருத்துவ செலவை ஏற்க முன்வர வேண்டும் என்றும் கருத்துகளை இணையத்தில் பதிவிட்டு வந்தனர்.

இந்நிலையில் பவா லக்ஷ்மன் அவர்கள் தனது உடல்நலம் குறித்து நமது கலட்டா சினிமா சேனலில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் பேசுகையில்,

“பெங்களூர் போய் கொண்டிருந்து போது தெரியாமல் ஜெனரேட்டர் மீது கால் வெச்சிட்டேன் . அது எனக்கு தெரியவில்லை. 10 நாளுக்கு பிறகு அந்த இடம் புண்ணாக மாறியது. சிகிச்சை செஞ்சும் அது சரியாகவில்லை. சர்க்கரை நோயினால் பின் மருத்துவரிடம் கேட்ட‌போது டாக்டர் ஒரு விரல் எடுக்கனும் னு சொல்லிட்டாங்க.. மருத்துவமணை வந்து பார்த்ததும் 3 விரல் எடுத்துட்டாங்க..

நான் அலட்சியமா விட்டதால் தான் இப்படி ஆச்சு.. பொருளாதார ரீதியா பார்க்கனும் னா நான் தனியார் மருத்துவமனையில் பார்க்க முடியாது. அரசு மருத்துவமனை என்பதால் செலவு மிச்சம். வீட்டுக்கு போனா 1 மாதம் வேலை போகாது அதுக்கு செலவு வரும். அதற்கு நண்பர்கள் உதவுறாங்க.. இயக்குனர் விக்ரமன், ரமேஷ் கண்ணா, தாடி பாலாஜி ஆகியோர் வந்து பார்த்தார்கள். நான் யாரையும் எதிர்பார்த்து நிற்கல.. சின்ன சின்ன கலைஞர்கள் உதவி செய்றாங்க.. நான் குணமடைந்த பின் திரைப்படங்களில் நடிப்பேன். எனக்கு நம்பிக்கை இருக்கு.. " என்றார் பவா லஷ்மணன்.