90'S கிட்ஸ்களின் ஃபேவரட் அம்சங்கள் நிறைந்த திரைப்படமாக கடந்த 2019ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் கோமாளி. தனது முதல் திரைப்படமாக இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, யோகிபாபு மற்றும் காஜல் அகர்வால் இணைந்து நடித்து வெளிவந்த கோமாளி திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

கோமாளி திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் இயக்கி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு தொடங்கியது. தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 22வது தயாரிப்பாக உருவாகும் #AGS22 திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் இணைந்து சத்யராஜ் ராதிகா யோகி பாபு இவானா ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். தினேஷ்குமார் புருஷோத்தமன் ஒளிப்பதிவு செய்யும் #AGS22 படத்திற்கு பிரதீப்.E. ராகம் படத்தொகுப்பு செய்கிறார்.

#AGS22 படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்நிலையில் #AGS22 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூலை - 4ஆம் தேதி) வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் #AGS22 திரைப்படத்தின் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

My next movie's Title and First look from Tomorrow 7PM.
Dedicating this movie to the girl who left me .
Thankyou #Kalpathi.S.Aghoram#KalpathiGanesh #KalpathiSuresh @thisisysr #Sathyaraj @realradikaa @iYogiBabu @archanakalpathi @aishkalpathi @venkat_manickam@_Ivana_official pic.twitter.com/q8fRNWFWod

— Pradeep Ranganathan (@pradeeponelife) July 3, 2022