கோவை பெண் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு தனியார் அடுக்குமாடிக் குடியிருப்பில் 60 வயதான நடராஜ், 54 வயதான மனைவி சரோஜா மற்றும் தன் மகன், மருமகளுடன் வசித்து வந்தார்.

அவர்களது வீட்டின் அருகே நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த 29 வயதான யாசர் அராபத் என்பவர் வசித்து வந்தார்.

நடராஜ் வீட்டில் மகனும், மருமகளும் பகலில் வேலைக்குச் சென்றுவிடுவார்கள். வீட்டில் தனியாக இருக்கும் சரோஜாவிற்கு வயது முதிர்வு காரணமாக கை கால் நடுக்கம் இருக்கும். அதனால், சின்ன சின்ன வேலைகளுக்குப் பக்கத்து வீட்டில் இருக்கும் யாசர் அராபதை உதவி அழைப்பது வழக்கம்.

இந்நிலையில், கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 13 ஆம் தேதி, சரோஜா வீட்டிற்குள் நுழைந்த யாசர் அராபத், அவரை கீழே தள்ளி கத்தியால் குத்தியுள்ளார். இதில், ரத்த வெள்ளத்தில் மிதந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனையடுத்து, அவர் அணிந்திருந்த ஜெயின், மோதிரம், கம்மல் ஆகியவற்றைத் திருடிக்கொண்டார். மேலும், சரோஜாவின் உடலை வெளியே கொண்டு செல்வதில் சிரமம் இருந்ததால், அவரது உடலைத் துண்டு துண்டாக வெட்டி சூட்கேசில் தலை, கை, கால் என தனித்தனியாக வெட்டி அங்குள்ள படுக்கை அறையில் மறைத்து வைத்துவிட்டு, தப்பிச் சென்றுவிட்டார்.

சற்று நேரத்தில் வீடு திரும்பிய கணவன் நடராஜன், மனைவியை எங்கும் கிடைக்கவில்லை என்பதால், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், நடராஜன் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, விரைந்து வந்த போலீசார் வீட்டில் உள்ளே சென்று ஆய்வு செய்தனர். அப்போது, அங்கு சரோஜா கொலை செய்யப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பின்னர் சந்தேகத்தின் பேரில் போலீசார், யாசர் அராபத்தை கண்டுபிடித்து அவரிடம் 11:06 27-09-2019விசாரித்தபோது, அவர் கொலை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் அவனைக் கைது செய்தனர்.

இது தொடர்பான வழக்கு கோவை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் இதுவரை 31 சாட்சியங்கள் விசாரிக்கப்பட்ட நிலையில், யாசர் அராபத்துக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை வழங்கி தீர்ப்பு அளித்தது. இதனையடுத்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.