டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் போன்ற வெற்றி படங்களை இயக்கியவர் அஜய் ஞானமுத்து. தற்போது சியான் விக்ரம் வைத்து கோப்ரா படத்தை இயக்கி வருகிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் சென்னை படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. கே.ஜி.எஃப் புகழ் ஸ்ரீநிதி ஷெட்டி நாயகியாக நடிக்கிறார். கிரிக்கெட்டர் இஃர்பான் பதான் வில்லனாக அறிமுகமாகிறார். டப்ஸ்மேஷ் புகழ் மிர்னாலினி ரவி முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி பட்டையை கிளப்பியது.

தற்போது இப்படத்தின் நான்காம் கட்ட படப்பிடிப்பு கொல்கத்தாவில் நடக்கவிருப்பதாக இயக்குனர் பதிவு செய்துள்ளார். சம்மர் ரிலீஸில் இந்த படம் இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் சியான் ரசிகர்கள்.