இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் கதாநாயகனாக நடித்திருக்கும் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகிறது. ஆயுத பூஜை வெளியீடாக வெளிவரும் இந்த லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு பக்கா ஆக்சன் ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்தின் டிரைலர் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் தற்போது லியோ திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவில் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதுவரை தமிழ் சினிமாவில் அனுபவம் செய்திடாத ஒரு மிகப்பெரிய விஷுவல் ட்ரீட்டாக கட்டாயம் லியோ படம் இருக்கும் என குறிப்பாக ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்களின் பணியை எல்லோரும் பாராட்டி வருகின்றனர்.இந்த நிலையில் ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா அவர்கள் தற்போது லியோ திரைப்படத்தில் பணியாற்றியது குறித்து ரிலீசுக்கு முன்பாக முக்கிய அறிக்கையை ஒன்றை தனது X பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். அதில்,

“விஜய் சார் இன்னொரு முறை என்னை நம்பியதற்கு நன்றி! லியோ படத்தில் நீங்கள் நடித்த விதம் மிகவும் குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் கனகராஜ் நீங்கள் ஒரு ஜீனியஸ்! எந்த ஒரு ஒளிப்பதிவாளரும் உங்களோடு பணியாற்ற வேண்டும் என்று விரும்புவார்கள்.

அனிருத் உங்கள் இசை இதுவரை யாரும் செய்திடாதது.

அன்பறிவு மாஸ்டர்களே நீங்கள் சிறந்தவர்கள். கலை இயக்குனர் சதீஷ் நீங்கள் முழு குழுவிலும் மிகவும் அர்ப்பணிப்புள்ள டெக்னீஷியன். ஃபிலோமின் ராஜ் நீங்கள் புத்திசாலியான எடிட்டர்.

லியோ படத்திற்கான தரப்படுத்தல் செயல்முறையின் மூலம் #Dolby Vision பணிப்பாய்வை உள்ளேயும் வெளியேயும் அறிமுகப்படுத்த மிகவும் உற்சாகமாக உள்ளது

IMAX-க்கான Dolby vision 48 nits DCI சினிமா, சுருக்கப்படாத Dataவில் அதிக Bit Rate கொண்ட தரநிலைகள்
Netflix-க்கான EPIQ PLF Bit Rate சுருக்கப்படாத 16 Bit TIFF
Dolby vision 1000nits HDR
தொலைக்காட்சி மற்றும் ஒளிபரப்புக்கான Dolby vision 100 nits
ஆகியவற்றையும் லியோ வழங்குகிறது

உங்களை சிறந்த முறையில் மகிழ்விக்க அனைத்து வடிவங்களிலும் சரியான நோக்கத்துடன் பணிப்பாய்வுகளை வழங்குவதற்கு லியோ எனது வாழ்க்கையில் ஒரு சிறப்பு மைல்கல்.

லியோ 2.39 விகிதத்தில் படமாக்கப்பட்டது.
லோகேஷ் மனதைக் கவரும் நவீன ஆக்‌ஷன் படங்களைத் தயாரிக்கிறார், ஆனால் அவருடைய சிந்தனைகள் கிளாசிக் விண்டேஜ்! அவர் தனது படங்களில் விண்டேஜ் பாடல்களைப் பயன்படுத்துகிறார். மேலும் அவர் தனது அடுத்த படத்தில் செல்லுலாய்ட் ஃபிலிம் IMAX கேமராக்களில் படமெடுக்க விரும்புகிறார்!

லியோ படத்தின் இந்த தோற்றத்திற்கு என் கலரிஸ்ட் க்ளென் காஸ்டினோவுக்கு நன்றி.

Dolby vision பணிப்பாய்வில் எனக்கு வழிகாட்டியதற்கு நன்றி பாலாஜி. புதிய உயரங்களை அடைய எனக்கு பகிர்ந்த விஎஃப்எக்ஸ் அறிவிற்காக நன்றி ஸ்ரீனிவாஸ் மோகன் சார். நன்றி Igene DI & VFX குழு சிவசங்கர். அட்டகாசமான கழுதைப்புலி காட்சிக்காக நன்றி MPC VFX,PhantomFX.

மிகக் குறைவான நேரத்தில் இதை சாத்தியப்படுத்திய என்னுடைய உதவியாளர்கள் படத்தின் உதவி இயக்குனர்கள் மற்றும் ஒட்டுமொத்த பட குழுவினருக்கும் நன்றி இப்போது லியோ உங்களுடையது.“

என தெரிவித்துள்ளார். ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் அந்தப் பதிவு இதோ…