தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் மணிரத்னம்.தனது படங்கள் மூலம் இந்திய சினிமாவை திரும்பிப்பார்க்க வைக்கும் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த செக்க சிவந்த வானம் படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை தொடர்ந்து தனது கனவு படமான பொன்னியின் செல்வன் படத்தினை இயக்கியுள்ளார் மணி ரத்னம்.இயக்குனர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பல முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.சீயான் விக்ரம்,கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ்,சரத்குமார்,பார்த்திபன்,ஜெயராம், ஐஸ்வர்யா லக்ஷ்மி என பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வரவேற்பு குறித்து நன்றி தெரிவிக்கும் விதமாக விக்ரம் ஒரு வீடீயோவை வெளியிட்டுள்ளார்.இந்த படத்திற்கு ரசிகர்கள் அளிக்கும் பேராதரவிற்கு நன்றி,ஆதித்த கரிகாலனாக நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.படக்குழுவினர்,ரசிகர்கள்,நடிகர் நடிகைகள் எல்லாருக்கும் நன்றி என்று அவர் தெரிவித்துள்ளார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh

— Aditha Karikalan (@chiyaan) October 1, 2022